IPL 2027 Retention: வெளியேறும் ஹர்திக் பாண்டியா.. மீண்டும் கேப்டனாகும் ரோஹித்.. மும்பை தக்கவைக்கவுள்ள வீரர்கள் பட்டியல்!
IPL 2027 MI Retention: ஐபிஎல் 2027 மினி ஏலத்திற்கு முன், மும்பை இந்தியன்ஸ் தக்கவைப்புப் பட்டியல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 15-க்குள் பட்டியல் வெளியாகவுள்ள நிலையில், ஹர்திக் பாண்டியாவின் வெளியேற்றம் மற்றும் ரோஹித் சர்மா அல்லது திலக் வர்மா கேப்டன்சி குறித்த யூகங்கள் நிலவுகின்றன. பும்ரா, சூர்யகுமார் போன்ற முக்கிய வீரர்கள் தக்கவைக்கப்படலாம்.
ஐபிஎல் 2027 மினி ஏலம் வருகின்ற 2026 டிசம்பர் 16ம் தேதி கோவாவில் நடைபெறும். ஐபிஎல் 2027 சீசனுக்கு (IPL 2027) முன்னதாக அணிகளுக்குள் பெரிய மாற்றங்களும் பரிமாற்றங்களும் நடைபெற்று வருகின்றன. அனைத்து அணிகளும் வருகின்ற 2026 நவம்பர் 15ம் தேதிக்குள் தங்களது தக்கவைப்புப் பட்டியலை வெளியிட வேண்டும். இதில், கடந்த சில மாதங்களாக அதிகம் பேசப்படும் வீரர் ஹர்திக் பாண்ட்யா (Hardik Pandya) ஆவார். ஹர்திக் வெளியேறினால், மும்பை இந்தியன்ஸ் அணி மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரை இழக்கும், மேலும், அடுத்த சீசனுக்கு ஒரு புதிய கேப்டனையும் தேர்ந்தெடுக்க வேண்டியதாக இருக்கும்.
ALSO READ: ஹர்திக் இணையும் அணி சென்னையா? ராஜஸ்தானா? அஸ்வின் கணிப்பு!
மினி-ஏலத்திற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணி விடுவிக்கக்கூடிய ஒரே வீரர் ஹர்திக் மட்டும் அல்ல. கேசவ் மஹராஜ் மற்றும் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் போன்ற அனுபவ வீரர்களையும் வெளியேற்றலாம். ஐபிஎல் 2027-க்கான மும்பை இந்தியன்ஸின் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் எப்படி இருக்கும் என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா மீண்டும் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்ற யூகங்களும் நிலவி வரும் நிலையில், கேப்டன் பதவிக்கு திலக் வர்மாவின் பெயரும் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.




மும்பை அணியின் சாத்தியமான தக்கவைப்புப் பட்டியல்
மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் முதுகெலும்பாகக் கருதப்படுகின்றனர். திலக் வர்மா எதிர்கால கேப்டனாகவும் பார்க்கப்படுகிறார். திலக் வர்மா கடந்த 2022ம் ஆண்டு முதல் MI அணியில் இருந்து வருகிறார், அணியையும் நிர்வாகத்தையும் நன்கு புரிந்துள்ளார், மேலும் நீண்ட காலத்திற்கு மும்பை அணிக்கு கேப்டனாக இருக்க முடியும். அந்த வகையில், திலக் மும்பை அணியின் ஒரு முக்கிய வீரராக விளங்குகிறார்.
வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்கள் அணிக்கு அதிகளவில் பலம் சேர்ப்பார்கள். எனவே, ஹர்திக் பாண்ட்யா வெளியேற்றப்பட்டாலும், ஷர்துல் தாக்கூரை தக்க வைத்துக்கொள்ள மும்பை அணி விரும்பும். இதனுடன் நமன் தீருக்கு முக்கிய வீரராக பார்க்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சு வரிசையில் ஜஸ்பிரித் பும்ராவிற்கு ஆதரவாக மும்பையின் வேகப்பந்து தாக்குதலில் சில மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது, அதன்படி, எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பந்துவீச்சுத் துறையிலிருந்து பல பெயர்கள் விடுவிக்கப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்படலாம். இதற்கிடையில், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டின் தற்போதைய ஃபார்மைக் கருத்தில் கொண்டு, அவர் விடுவிக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை.
ALSO READ: சீக்ரெட்டாக வெளியான ஐபிஎல் 2027 மினி ஏல தேதி.. பிசிசிஐ திட்டம் இதுதான்!
MI அணியில் தக்கவைத்துக்கொள்ள வாய்ப்புள்ள வீரர்கள்:
ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா , திலக் வர்மா, நமன் தீர், ஷர்துல் தாக்கூர், மிட்செல் சான்ட்னர், வில் ஜாக்ஸ், அல்லா கசன்ஃபர், முகமது இசார், தீபக் சாஹர், ரியான் ரிக்கில்டன் , குயின்டன் டி காக்.
விடுவிக்க வாய்ப்புள்ள வீரர்கள்:
ஹர்திக் பாண்டியா, ராபின் மின்ஸ், கார்பின் போஷ், ராஜ் பாவா, டேனிஷ் மாலேவார், கிரிஷ் பகத், மயங்க் ராவத், டிரென்ட் போல்ட், அஷ்வனி குமார், மயங்க் மார்கண்டே, கேசவ் மகாராஜ், ரகு ஷர்மா ஆகியோர் விடுவிக்கப்படலாம்.