AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

India vs Zimbabwe Women 3rd T20 Live : இந்தியா – ஜிம்பாப்வே மகளிர் 3வது டி20 – ஆறுதல் வெற்றி பெறுமா ஜிம்பாப்வே?

IND-W vs ZIM-W 3rd T20 Live Score Updates in Tamil : இந்தியா மற்றும் ஜிம்பாப்வே மகளிர் அணிகளுக்கு இடையிலான 3வது டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டி ராய்ப்பூரில் அக்டோபர் 20, 2026 இன்று இரவு 7 மணிக்கு துவங்குகிறது. ஸ்மிருதி மந்தனா தலைமையிலான இந்திய மகளிர் அணி, ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது.

Karthikeyan S
Karthikeyan S | Updated On: 20 Oct 2026 15:13 PM IST
Share
India vs Zimbabwe Women 3rd T20 Live :  இந்தியா – ஜிம்பாப்வே மகளிர் 3வது டி20  – ஆறுதல் வெற்றி பெறுமா ஜிம்பாப்வே?
Indw Vs Zimw

LIVE NEWS & UPDATES

  • 20 Oct 2026 03:13 PM (IST)

    IND-W vs ZIM-W 3rd T20I Live: முதல் வெற்றியை பதிவு செய்யுமா ஜிம்பாப்வே மகளிர்..?

    ஸ்மிருதி மந்தனா தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, தொடக்க ஆட்டங்கள் இரண்டிலும் வெற்றி பெற்று, தொடரில் 2-0 என்ற கணக்கில் வெல்ல முடியாத முன்னிலையைப் பெற்றுள்ளது. இது இந்த வடிவத்தில் அவர்களின் தொடர்ச்சியான 10வது வெற்றியாகும். மறுபுறம், ஜிம்பாப்வே இந்த ஆண்டு ஒரு டி20 சர்வதேசப் போட்டியில் கூட இன்னும் வெற்றி பெறவில்லை. ஜிம்பாப்வே மகளிர் கிரிக்கெட் அணி இந்த ஆண்டு 20 போட்டிகளில் விளையாடி, இந்தியாவுக்கு எதிரான இரண்டு தோல்விகள் உட்பட அனைத்திலும் தோல்வியடைந்துள்ளது.

  • 20 Oct 2026 03:11 PM (IST)

    IND-W vs ZIM-W 3rd T20I Live: ஜிம்பாப்வே மகளிர் அணியை ஒயிட் வாஷ் செய்யுமா இந்திய மகளிர்?

    ஜிம்பாப்வேக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேசத் தொடரில் 3-0 என்ற கணக்கில் முழுமையாக வெற்றி பெறும் நோக்குடன் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இன்று அதாவது 2026 அக்டோபர் 20ம் தேதி களமிறங்குகிறது. ஸ்மிருதி மந்தனா தலைமையிலான இந்திய அணி, இந்த தொடரில் முதல் 2 டி20 போட்டியில் சிறப்பான வெற்றியைப் பதிவுசெய்து, தொடரில் 2-0 என்ற அசைக்க முடியாத முன்னிலையைப் பெற்றது.

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே மகளிர் அணிகளுக்கு இடையிலான 3வது டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டி ராய்ப்பூரில் நடைபெறுகிறது. ஸ்மிருதி மந்தனா தலைமையிலான இந்திய மகளிர் அணி, ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் இரு அணிகளின் பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் செயல்பாடுகள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கனவே 2 போட்டிகளில் வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றிய நிலையில் இன்றைய போட்டியில் ஜிம்பாப்வே அணி ஆறுதல் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்த நிலையில் இந்தப் போட்டி அக்டோபர் 20, 2026  ராய்பூரில் இந்திய நேரப்படி சரியாக 7 மணிக்கு துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் ஜிம்பாப்வே அணி உள்ளது. இந்தியா – ஜிம்பாப்வே மகளிர் அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டியின் டாஸ் முடிவு, பிளேயிங் லெவன், ஸ்கோர், விக்கெட்டுகள், பவுண்டரிகள், சிக்ஸர்கள், முக்கிய நிகழ்வுகள் மற்றும் போட்டியின் முடிவு உள்ளிட்ட அனைத்து அப்டேட்களையும் இந்த பதிவில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்

Published On - Oct 20,2026 2:30 PM

Follow Us