AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Jailer 2: ரூ 500 கோடியை நெருங்கும் ஜெயிலர் 2.. 5 நாட்கள் முடிவில் வசூல் எவ்வளவு? – வைரலாகும் தகவல்!

Jailer 2 5th Day Collection: தென்னிந்திய சினிமாவில் 2026ம் ஆண்டில் அதிக எதிர்பார்ப்புடன் வெளியாக மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவரும் திரைப்படம்தான் ஜெயிலர் 2. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக இந்த திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில், இப்படமானது வெளியாகி 5 நாட்கள் முடிவில் மொத்தம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் குறித்து பார்க்கலாம்.

Jailer 2: ரூ 500 கோடியை நெருங்கும் ஜெயிலர் 2.. 5 நாட்கள் முடிவில் வசூல் எவ்வளவு? – வைரலாகும் தகவல்!
ஜெயிலர் 2 5 நாட்கள் வசூல்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 20 Oct 2026 15:06 PM IST

கோலிவுட் சினிமாவில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக படங்களில் ஹீரோவாகவே நடித்து மக்களிடையே மிகவும் பிரபலமானவராக இருந்துவருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth). இவர் இதுவரை மொத்தம் கிட்டத்தட்ட 172 திரைப்படங்கள் இவரின் நடிப்பில் வெளியாகியுள்ளது. அந்த விதத்தில் இறுதியாக இவரின் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் ஜெயிலர் 2 (Jailer 2). தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) இந்த திரைப்படத்தை இயக்கியுள்ள நிலையில், சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் கலாநிதிமாறன் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படமானது 2023ம் ஆண்டில் வெளியான ஜெயிலர் 1 படத்தின் தொடர்ச்சியான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படமானது கடந்த 2026ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது.

இந்த படமானது பான் இந்திய மொழிகளில் வெளியாகியிருந்த நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. இப்படமானது 5 நாட்கள் முடிவில் மொத்தம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என இணையத்தில் தகவல்கள் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: கன்னட இயக்குநருடன் புதிய படத்தில் இணைந்த சசிகுமார்.. வெளியானது ஷூட்டிங் பூஜை கிளிக்ஸ்!

ஜெயிலர் 2 திரைப்படத்தின் 5 நாட்கள் முடிவு வசூல் விவரம்:

இந்த ஜெயிலர் 2 படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் என்ற வேடத்தில் நடித்திருந்தார். அவருடன் இந்த இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு, வித்யா பாலன், விஜய் சேதுபதி, மோகன்லால், சிவராஜ்குமார் மற்றும் கேமியோ வேடத்தில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர்.

இதையும் படிங்க: வாரணாசி படத்தின் ஷூட்டிங்கில் அது பெரிய சவாலாக இருந்தது – இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி பேச்சு!

இந்த படமானது வெளியாகி கிட்டத்தட்ட 5 நாட்களை கடந்திருக்கும் நிலையில், இதுவரை உலகமெங்கும் ரூ 477.5 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துவருகிறதாம். விரைவில் ரூ 500 கோடி வசூலை நெருங்கும் என வட்டாரங்கள் தெரிவித்துவருகின்றன.

ஜெயிலர் 2 திரைப்படத்தின் திரையரங்கு வரவேற்பை குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இந்த ஜெயிலர் 2 படத்திற்கு திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பு கிடைத்துவருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்த நிலையில், பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரையரங்குகளை தெறிக்கவிட்டிருந்தது. அந்த விதத்தில் இந்த படத்தின் மீது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்புகள் இருந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 5 நாட்களிலே ரூ 500 கோடியை நெருங்கவுள்ள நிலையில், விரைவில் ரூ 1000 கோடி வசூலையும் பெரும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Follow Us