பொங்கலுக்கு இல்லையா? ரஜினிகாந்தின் தர்மன் பட ரிலீஸ் குறித்து வைரலாகும் தகவல்!
Actor Superstar Rajinikanths Dharman Movie Release Update | தமிழ் சினிமாவில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் படம் தர்மன். இந்தப் படத்தின் வெளியீடு குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக உலக அளவில் தனக்கு என்று ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து இருப்பவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Super Star Rajinikanth). இவரது நடிப்பில் வெளியாகும் படங்களை உலக அளவில் உள்ள ரசிகர்கள் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இந்த 2026-ம் ஆண்டில் 15-ம் தேதி அக்டோபர் மாதம் ஜெயிலர் 2 படம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இந்த 2026-ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் தற்போது அதிக அளவில் வசூலித்த படமாக ஜெயிலர் 2 உள்ளது என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வைரலாகி வருகின்றது. ஒரு பக்கம் ஜெயிலர் 2 படம் திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் மற்றொரு பக்கம் அவரது நடிப்பில் தர்மன் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.
அதன்படி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தற்போது உறுவாகி வரும் படம் தர்மன். ரஜினிகாந்தின் 173-வது படமாக உருவாகி வரும் இந்த தர்மன் படத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து எழுதி இயக்கி வருகிறார். மேலும் நடிகர் கமல் ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஸ்னல் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து வருகின்றது.




ரஜினிகாந்தின் தர்மன் பட ரிலீஸ் குறித்து வைரலாகும் தகவல்:
இந்த நிலையில் இந்தப் படத்தின் வெளியீடு குறித்த தகவல் சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி, தர்மன் திரைப்படம் 2027 பொங்கல் பண்டிகையன்று வெளியாகாது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 40 சதவீதம் நிறைவடைய வேண்டியுள்ளது. இது நவம்பர் மாத இறுதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்புக்குப் பிந்தைய பணிகள் மற்றும் சிஜி வேலைகளும் இன்னும் முடிக்கப்பட வேண்டியுள்ளன.
சிஜி பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன; ஒவ்வொரு படப்பிடிப்பு கட்டத்திற்குப் பிறகும், படமாக்கப்பட்ட காட்சிகள் செயலாக்கத்திற்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. இப்படம் 2027 ஏப்ரல் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தகவல் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
Also Read… க்ரைம் த்ரில்லர் பாணியில் அர்ஜுன் தாஸின் புது படத்தின் டைட்டில் இதுதான் – வைரலாகும் அப்டேட்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Dharman is NOT scheduled for a Pongal 2027 release👀
The film’s shooting is still 40% pending and is expected to wrap up only by the end of November. Post-production and CGI work are also yet to be completed.
CGI work is already progressing in parallel, with footage being sent for processing after each shooting schedule. The film’s scheduled theatrical release is April 14, 2027.
The makers have no plans for a #KamalHaasan cameo in the film. They are saving the excitement of the #Rajinikanth x #KamalHaasan combination exclusively for #KHxRK, directed by #Nelson. 🔥
Source: Touring Talkies
— Movies Singapore (@MoviesSingapore) October 18, 2026
Also Read… இன்று மாலை வெளியாகிறது ஓம் படத்திலிருந்து வீழா வீரா பாடல் – உற்சாகத்தில் ரசிகர்கள்