ஜெயிலர் 2 படத்தின் 4 நாள் வசூல் இத்தனை கோடிகளா? இணையத்தில் வைரலாகும் தகவல்
Jailer 2 Movie 4 Days Box Office Collection Update | நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ள படம் ஜெயிலர் 2. இந்தப் படம் 4 நாட்களில் எத்தனை கோடிகள் வசூலித்துள்ளது என்பது குறித்து தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருக்கு தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் உலக அளவில் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் அதிக அளவில் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த படம் ஜெயிலர் 2. இந்தப் படம் கடந்த 15-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. ஜெயிலர் படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் நெல்சன் திலீப் குமார் தான் இந்த இரண்டாவது பாகத்தையும் எழுதி இயக்கி இருந்தார்.
இந்த ஜெயிலர் 2 படத்தில் முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் பலர் இந்த இரண்டாம் பாகத்தில் தொடர்ந்து நடித்து இருந்தாலும் இரண்டாம் பாகத்தில் பல புது நடிகர்கள் இணைந்து நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. படம் திரையரங்குகளில் வெளியானதில் இருந்தே தொடர்ந்து இந்தப் படத்தினை பிரபலங்களும் ரசிகர்களும் கொண்டாடி வருகினறனர்.




ஜெயிலர் 2 படத்தின் 4 நாள் வசூல் இத்தனை கோடிகளா?
அதன்படி ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உலகளவில் 4 நாட்களில் சுமார் 425 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலைப் பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.. ஒரு தமிழ் படத்திற்கு மிக விரைவாக 400 கோடி ரூபாய் வசூல். இன்று மற்றும் நாளை விடுமுறை நாட்கள் என்பதால், இப்படம் விரைவில் 500 கோடி ரூபாய் எனும் மைல்கல்லை எட்டும் என்று எதிர்பார்க்கலாம். இது, இதுவரை வெளியான தமிழ் திரைப்படங்களிலேயே அதிக வசூல் செய்த படமாக மாறப்போகிறது. முற்றிலும் தகுதியான வெற்றி. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போதைய தலைமுறை நாயகர்களுக்கு மிக உயர்ந்த தரநிலையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். இந்த சாதனையை மற்றவர்கள் முறியடிக்க இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம் எனறும் சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றது.
Also Read… பிக்பாஸில் முனியம்மாவின் செயலை கண்டித்த விஜய் சேதுபதி – வைரலாகும் வீடியோ
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#JAILER2 – 4 Day Opening weekend Gross Stands at More than 425+crs WW (approx)..😲🔥 The Fastest 400cr for a Tamil Film..⭐ With Today and Tomorrow Being Holidays, We can expect the film to cross 500cr Mark Soon..🤝
The film is gonna become the All Time Highest Grossing Tamil Film..💥 Most Deserving film..🤝 Superstar #Rajinikanth is setting the Bar really High for the Current Generation of Heroes.. It’ll Take a Few Years for Anyone to Beat This Record.. Unreal Stardom..⭐
— Laxmi Kanth (@iammoviebuff007) October 19, 2026
Also Read… நடிகர் பிரபாஸின் ஸ்பிரிட் படத்தின் நியூ ரிலீஸ் தேதி இதுதான் – வெளியானது அப்டேட்