AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Dude: டியூட் படத்தின் ஓராண்டு நிறைவு.. டெலீட்டட் காட்சியை பகிர்ந்த கீர்த்திஸ்வரன்!

One Year Of Dude: கடந்த 2025ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகியிருந்த திரைப்படம்தான் டியூட். பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜூவின் நடிப்பில் வெளியான நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றது. இன்றுடன் (17/10/2026) இப்படம் வெளியாகி ஒரு ஆண்டு நிறைவடைந்த நிலையில், இதன் டெலீட்டட் காட்சியை இயக்குநர் பகிர்ந்துள்ளார்.

Dude: டியூட் படத்தின் ஓராண்டு நிறைவு.. டெலீட்டட் காட்சியை பகிர்ந்த கீர்த்திஸ்வரன்!
டியூட் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 17 Oct 2026 20:46 PM IST

தமிழ் சினிமாவில் இளம் நடிகராகவும், இயக்குநராகவும் மக்களிடையே பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து புதிய திரைப்படங்கள் உருவாகிவருகிறது. லவ் டுடே (Love Today) படத்தின் மூலம் நடிகராக நுழைந்த நிலையில், கிட்டதட்ட 4 படங்களில் நடித்துள்ளார். அந்த விதத்தில் அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரனின் (Keerthiswaran) இயக்கத்தில் இயக்கத்தில் இவர் நடித்திருந்த திரைப்படம்தான் டியூட் (Dude). இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க, மலையாள நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நாயகியாக நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2025ம் ஆனது தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படமானது வெளியாகி சுமார் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருந்தது.

அந்த விதத்தில் இன்றுடன் (17/10/2026) இந்த படமானது வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ளது. இது குறித்து படக்குழு ஸ்பெஷல் பதிவை வெளியிட்டிருந்த நிலையில், இயக்குநர் கீர்த்திஸ்வரன் இப்படத்தின் டெலீட்டட் காட்சியை பகிர்ந்திருந்தார்.

இதையும் படிங்க: மன்னன் நான் வந்தனா ஊர் அலற… ஒரு ஆண்டை நிறைவு செய்தது பிரதீப் ரங்கநாதனின் டியூட் படம்!

டியூட் படத்தின் டெலீட்டட் சீன் குறித்து இயக்குநர் கீர்த்திஸ்வரன் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இந்த வீடியோவில், மமிதா பைஜூவை சரத்குமார் ஏற்றுக்கொள்ளும், காட்சியில் நீக்கப்பட்ட சில வினாடிகள் உள்ள காட்சி இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த பதிவில் இயக்குநர் கீர்த்திஸ்வரன், பிரதீப் ரங்கநாதன், சாய் அபயங்கர் மற்றும் மமிதா பைஜூவை பாராட்டி வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் கீர்த்திஸ்வரனின் புதிய படம்:

இயக்குநர் கீர்த்திஸ்வரன் டியூட் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமான இயக்குநராகிவிட்டார். அந்த விதத்தில் இவர் நடிகர் சிலம்பரசனின் புதிய படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவந்தது. மேலும் சில மாதங்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கீர்த்திஸ்வரனும் சிலம்பரசனுடன் படம் இணைவது குறித்து ஹின்ட் கொடுத்திருந்தார்.

இதையும் படிங்க: கீர்த்தி சுரேஷின் பர்த்டே.. அக்கா வெப் சீரிஸ் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தற்போது சிம்பு வெற்றிமாறனின் அரசன் படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கும் நிலையில், இதற்கு பின் இந்த படத்தில் இணைவார் என கூறப்படுகிறது. அந்த விதத்தில் விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us