AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மன்னன் நான் வந்தனா ஊர் அலற… ஒரு ஆண்டை நிறைவு செய்தது பிரதீப் ரங்கநாதனின் டியூட் படம்!

One Year Of Dude Movie | நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தப் படம் டியூட். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் ஒரு ஆண்டை நிறைவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மன்னன் நான் வந்தனா ஊர் அலற… ஒரு ஆண்டை நிறைவு செய்தது பிரதீப் ரங்கநாதனின் டியூட் படம்!
டியூட்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Oct 2026 17:10 PM IST

தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது நாயகனாக கலக்கி வருபவர் நடிகர் பிரதீப் ரங்கநாதன். இயக்குநராக முதல் படமான கோமாளியில் மாபெரும் வெற்றியைப் பெற்ற பிரதீப் ரங்கநாதன் அதனைத் தொடர்ந்து இரண்டாவது படத்தை தானே எழுதி இயக்கி நாயகனாகவும் அறிமுகம் ஆனார். அதன்படி பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆன படம் லவ் டுடே ஆகும். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே மாபெரும் வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் வெளியான ட்ராகன் படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்த நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்தப் படம் தான் டியூட்.

இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். மேலும் டியூட் படத்தின் மூலமாகதான் அவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடித்து இருந்தார். தமிழ் சினிமாவில் முன்னதாவே வேறு படத்தில் நடித்து இருந்தாலும் மமிதாவிற்கு திரையரங்குகளில் வெளியான முதல் தமிழ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு ஆண்டை நிறைவு செய்தது பிரதீப் ரங்கநாதனின் டியூட் படம்:

இந்தப் படம் கடந்த 17-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் கடந்த ஆண்டு வெளியான இந்த டியூட் படம் தற்போது ஒரு ஆண்டை நிறைவு செய்துள்ளது. இந்த நிலையில் இதனைக் கொண்டாடும் விதமாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… அனிருத் – காவ்யா மாறன் திருமணம்: நவம்பர் 21-ல் சென்னையில் வரவேற்பு.. முதல்வர் ரேவந்த் ரெட்டி வெளியிட்ட தகவல்!

டியூட் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… டோரதி படத்திலிருந்து வெளியானது கல்யாண விருந்து வீடியோ பாடல்

Follow Us