அனிருத் – காவ்யா மாறன் திருமணம்: நவம்பர் 21-ல் சென்னையில் வரவேற்பு.. முதல்வர் ரேவந்த் ரெட்டி வெளியிட்ட தகவல்!
Anirudh - Kavya Maran Wedding Reception: ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள முதலமைச்சரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. அப்போது, தங்களது மகள் காவ்யா மாறன் மற்றும் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு ரேவந்த் ரெட்டிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த வரவேற்பு நிகழ்ச்சி நவம்பர் 21-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அக்டோபர் 17, 2026: இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைச் செயல் அதிகாரி காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம் குறித்த தகவல்கள் மீண்டும் கவனம் பெற்றுள்ளன. காவ்யா மாறனின் பெற்றோர், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் மற்றும் காவேரி மாறன் ஆகியோர் தெலங்கானா முதலமைச்சர் ஏ. ரேவந்த் ரெட்டியைச் சந்தித்து, திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்துள்ளதாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு தெரிவிக்கிறது.
நவம்பர் 21ஆம் தேதி: அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி
Sun Group Chairman Shri Kalanithi Maran and his wife, Smt. Kavery Maran, met Hon’ble Chief Minister Shri A. Revanth Reddy at his residence in Jubilee Hills and invited him to the wedding reception of their daughter, Kavya Maran.
The wedding reception of Kavya Maran and Anirudh Ravichander is scheduled to be held in Chennai on November 21.
#KalanithiMaran #KavyaMaran— Telangana CMO (@TelanganaCMO) October 16, 2026
ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள முதலமைச்சரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. அப்போது, தங்களது மகள் காவ்யா மாறன் மற்றும் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு ரேவந்த் ரெட்டிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த வரவேற்பு நிகழ்ச்சி நவம்பர் 21-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம், பல மாதங்களாக சமூக வலைதளங்களில் பரவி வந்த இருவரின் திருமணம் குறித்த தகவல்கள் மீண்டும் பேசுபொருளாகியுள்ளன. இருப்பினும், அனிருத் மற்றும் காவ்யா மாறன் குடும்பத்தினர் திருமணம் தொடர்பான முழுமையான விவரங்களைத் தனியாக அதிகாரப்பூர்வமாக அறிவித்ததாகத் தகவல் இல்லை.
மேலும் படிக்க: ஜெயிலர் 2 மாபெரும் வெற்றி – ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்த இன்பன் உதயநிதி
கிரீஸ் நாட்டில் காவ்யா மாறனை கரம் பிடிக்கும் அனிருத் ரவிசந்தர்:
கடந்த 2025-ஆம் ஆண்டு முதலே இருவரும் காதலித்து வருவதாகவும், அவர்களது குடும்பத்தினர் திருமணம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. அப்போது, திருமணம் குறித்த வதந்திகளுக்குப் பதிலளித்த அனிருத், அவற்றை நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டிருந்தார்.
இதற்கிடையே, அனிருத்தின் உறவினரும் நடிகருமான ஒய்.ஜி. மகேந்திரன், கடந்த ஜூன் மாதம் அளித்த பேட்டியில் அனிருத்தின் திருமணம் குறித்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் பேசியிருந்தார். காவ்யா மாறன் திறமையானவர் என்றும், பெரிய அணியை நிர்வகிக்கும் திறன் கொண்டவர் என்றும் அவர் பாராட்டியிருந்தார்.
மேலும் படிக்க: ஓம் படத்தில் சாய் பல்லவி – ஸ்ரீலீலாவின் வேடம் எப்படி இருக்கும்? – இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேச்சு!
இதற்கிடையே, இருவருக்கும் கிரீஸ் நாட்டில் திருமணம் நடைபெறலாம் என்றும், நவம்பர் 11-ஆம் தேதி திருமணம் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், திருமண தேதி மற்றும் இடம் குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
மேலும், கலாநிதி மாறன் தமிழக முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களுக்கும் திருமண வரவேற்பு அழைப்பிதழ்களை வழங்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் நடைபெற உள்ள வரவேற்பு நிகழ்ச்சியில் திரையுலகம் மற்றும் அரசியல் துறையைச் சேர்ந்த பல முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.