AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஜெயிலர் 2 மாபெரும் வெற்றி – ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்த இன்பன் உதயநிதி

Inban Udhayanidhi Meets Rajinikanth : கடந்த அக்டோபர் 15, 2026 அன்று வெளியான ஜெயிலர் 2 திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் நடிகர் ரஜினிகாந்த்தை அவரது இல்லத்தில் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் இன்பன் உதயநிதி நேரில் சந்தித்துள்ளார்.

ஜெயிலர் 2 மாபெரும் வெற்றி – ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்த இன்பன் உதயநிதி
ரஜினிகாந்த்துடன் இன்பன் உதயநிதி
Karthikeyan S
Karthikeyan S | Published: 16 Oct 2026 20:10 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) நடிப்பில் வெளியான ‘ஜெயிலர் 2’ திரைப்படம், தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வெளிநாடுகள் எனப் படம் வெளியான அனைத்துப் பகுதிகளிலும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று, வசூலையும் வாரி குவித்து வருகிறது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் இன்பன் உதயநிதி, நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார்.

படத்தின் வெற்றிச் செய்தியைப் பகிர்ந்துகொள்வதற்காக ரஜினிகாந்தின் வீட்டுக்குச் சென்ற இன்பன் உதயநிதியை, ரஜினி அன்புடன் தட்டிக்கொடுத்து வாழ்த்தியதாக கூறப்படுகிறது. இந்தத் தருணத்தின் புகைப்படத்தை இன்பன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது ரசிகர்களிடையே வேகமாகப் பரவி வருகிறது.

இதையும் படிக்க : Om Movie: குற்றப் பின்னணி.. தனுஷின் ஓம் படத்தின் கதைக்களம் இதுவா? – இணையத்தில் வைரலாகும் தகவல்!

ரெட் ஜெயன்ட்டுக்கு வெற்றிகரமான ஆண்டு

இட்லி கடை திரைப்படத்திலிருந்து ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்புகளைக் கவனித்து வருகிறார் இன்பன் உதயநிதி. இந்த 2026 ஆம் ஆண்டு அந்நிறுவனத்துக்கு ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக அமைந்தது. ‘பராசக்தி’ திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை. ஆனால் ‘இதயம் முரளி’, ‘கட்டா குஸ்தி 2’, ‘டிசி’, ‘மண்டாடி’ ஆகிய படங்கள் வெற்றிபெற்றன. அந்த வரிசையில், தற்போது ‘ஜெயிலர் 2’ இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றியாக உருவெடுத்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்த இன்பன் உதயநிதி

 

 

View this post on Instagram

 

A post shared by Inban Udhayanidhi (@inban.u)

அடுத்து ரஜினி – கமல் படம்

ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடிக்கவுள்ள திரைப்படத்தையும் ரெட் ஜெயன்ட் நிறுவனமே தயாரிக்க உள்ளது. இந்தப் படத்தை நெல்சன் இயக்க அனிருத் இசையமைக்கவுள்ளார். தற்போது ஜெயிலர் 2 படம் பெறும் வெற்றி பெற்ற நிலையில் ரஜினி – கமல் இணையும் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ரஜினியுடனான இன்பனின் இந்தச் சந்திப்பு திரையுலக வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

இதையும் படிக்க : Keerthy Suresh: கீர்த்தி சுரேஷின் கைவசம் உள்ள புதிய திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா?

தற்போது தமிழக முதல்வராக உள்ள விஜய் நடித்த ‘குருவி’ திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் உதயநிதி ஸ்டாலின். பின்னர் ஆதவன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த அவர் ஓகே ஓகே படத்தின் மூலம் கதாநாயகனாக உயர்ந்தார். தற்போது இன்பன் உதயநிதியும் அதே பாதையில் பயணிப்பதாக ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். அதை உறுதிப்படுத்தும் வகையில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் விரைவில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளதாகவும், அதற்காகத் தீவிர நடிப்புப் பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவக்கின்றன.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், எஸ்.ஜே.சூர்யா, சூரஜ் வெஞ்சரமூடு, வித்யா பாலன், மிர்னா மேனன், யோகி பாபு, நமோ நாராயணன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  மேலும் முதல் பாகத்தை போலவே மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளனர்.

Follow Us