பிரிட்டிஷ் காலப் பின்னணியில்… விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகாவின் ரணபாலி திரைப்படம் எப்படி இருக்கு? – விமர்சனங்கள் இதோ
Ranabaali Review: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களாகவும், நிஜ ஜோடியாகவும் இருந்துவருபவர்கள் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா. இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்து நடித்திருந்த படம்தான் ரணபாலி. இப்படம் இன்று (16/10/2026) உலகமெங்கும் வெளியாகியுள்ள நிலையில், இதன் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம்.
தென்னிந்திய மொழிகளில் மக்கள் மத்தியில் அதிகமா ஈர்க்கப்படும் நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் விஜய் தேவரகொண்டா (Vijay Deverakonda). இவரின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் பிரம்மாண்டமான திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இவரின் நடிப்பில் இந்த 2026ம் ஆண்டில் வெளியாகியுள்ள புத்தம் புதிய திரைப்படம்தான் ரணபாலி (Ranabaali). இதை இயக்குநர் ராகுல் சங்கிருத்யன் (Rahul Sankrityan) இயக்கியுள்ள நிலையில், இன்று (16/10/2026) ஆண்டில் உலகமெங்கும் இப்படம் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா (Rashmika Manndana) நடித்துள்ளார். இந்த படமானது கடந்த 1960-களில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இருந்த வறுமை மற்றும் இந்திய மக்களின் பாடுகள் குறித்த கதைக்களத்தில் காட்டப்பட்டுள்ளது.
இதில் வெள்ளை காரர்களை எதிர்த்து நிற்கும் நாயகனாக விஜய் தேவரகொண்டா நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரணபாலி படமானது இன்று உலகமெங்கும் ரிலீஸாகியுள்ள நிலையில், இதன் எக்ஸ் விமர்சனங்கள் குறித்து விவரமாக பார்க்கலாம்.




இதையும் படிங்க: அவினாஷ் மற்றும் ஜேசனிடையே மோதல்.. மிரட்டி சென்ற ஜேசன் – தீயாய் பரவும் ப்ரோமோ!
ரணபாலி படத்தில் நடிகர்களின் நடிப்பு எப்படி இருக்கிறது:
#Ranabaali Honest Intentions, Patience Testing Execution!
The director sincerely tries to tell real stories/events set against a beaten to death British backdrop, but the dead slow screenplay and flat narration test your patience. VD-Rashmika’s portions provide some relief and are the film’s main highlight, but the film lacks the emotional connect a subject like this needs and feels lifeless and tiring for long stretches.
Production values and set design stand out. VD’s effort is visible and he gives a sincere performance, though his characterization and histrionics feel odd at times. BGM is a huge letdown, and the film badly needs trimming. Sincere effort, but a strictly boring watch.
Rating: 2/5
— Venky Reviews (@venkyreviews) October 16, 2026
விஜய் தேவரகொண்டாவின் உச்சரிப்பும் வசன உச்சரிப்பும் ஆரம்பத்தில் சற்று செயற்கையாகத் தோன்றினாலும், படம் முன்னேறும்போது அவை கவனத்தைச் சிதறடிக்காமல் போகின்றன. விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா நல்ல நடிப்பை வழங்கியுள்ளனர், மேலும் அவர்களின் கெமிஸ்ட்ரி நன்றாகப் பொருந்துகிறது.
படத்தின் பின்னணி இசை மற்றும் கிளைமேக்ஸ் காட்சிகள்:
எந்தையா சாமி மட்டுமே தனித்து நிற்கும் பாடல், ஆனால் பின்னணி இசை ஏமாற்றமளிக்கிறது. கிளைமாக்ஸ் ஒப்பீட்டளவில் சிறப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தாலும், அது யூகிக்கக்கூடியதாகவே இருந்ததாம். இப்படத்தின் பின்னணியில் உள்ள நோக்கம் பாராட்டத்தக்கது, ஆனால் நல்ல நோக்கங்கள் மட்டுமே ஒரு திரைப்படத்தை ஈர்க்கக்கூடியதாக மாற்றிவிட முடியாது. ஒரு நம்பிக்கையூட்டும் யோசனை, அதன் செயலாக்கத்தால் வீணடிக்கப்பட்டுள்ளது என ரசிகர்கள் இணையத்தில் பேசிவருகிறார்கள்.
இதையும் படிங்க: எனதருமை நண்பர்… ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்திற்கு வாழ்த்து சொன்ன கமல்ஹாசன்!
ரணபாலி படத்தை திரையரங்குகள் சென்று பார்க்கலாமா?:
இப்படத்தை இயக்குநர் ஒரு பிரிட்டிஷ் பின்னணியில் அமைந்த உண்மைக் கதைகளையும் நிகழ்வுகளையும் நேர்மையாகச் சொல்ல முயற்சிக்கிறார், ஆனால் மிகவும் மெதுவான திரைக்கதையும் உயிரற்ற கதை சொல்லலும் உங்கள் பொறுமையைச் சோதிக்கின்றன. விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகாவின் காட்சிகள் ஓரளவு நன்றாக அமைந்துள்ளது, இது படத்தின் முக்கிய சிறப்பம்சமாக இருக்கின்றன, நீங்க வரலாற்று கதையை விரும்புபவர் மற்றும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிக்கா மந்தனாவின் ரசிகர் என்றாலே ஒருமுறை திரையரங்குகள் சென்று பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.