ரவி தேஜாவின் இருமுடி படத்தினை பாராட்டிய விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா தம்பதி
Vijay Deverakonda and Rashmika praising Irumudi movie | தெலுங்கு சினிமாவில் நடிகர் ரவி தேஜா நடிப்பில் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வரும் படம் இருமுடி. இந்தப் படத்தை தொடர்ந்து பிரபலங்களும் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் ரவி தேஜா. இவரது நடிப்பில் தெலுங்கு சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் ரவி தேஜா நடிப்பில் கடந்த 21-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் இருமுடி. இந்தப் படம் ஆக்ஷன் ட்ராமா பாணியில் அப்பா மகள் பாசத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளது. இந்த இருமுடி படத்தை இயக்குநர் ஷிவ நிர்வான எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் ரவி தேஜாவிற்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்து உள்ள நிலையில் அவர்கலுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.
அதன்படி நடிகர்கள் சாய் குமார், குழந்தை நட்சத்திரா, அஜய் கோஷ், ஜபர்தஸ்த் கோமரம், ரமேஷ் இந்திரா, ஸ்வாசிகா, லக்ஷ்மன் மீசாலா, சாம் மற்றும் ராஜ்குமார் காசிரெட்டி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படத்தினை ரசிகர்களும் பிரபலங்களும் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர்.




இருமுடி படத்தினை பாராட்டிய விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா தம்பதி
இந்த நிலையில் இந்த இருமுடி படத்தை தெலுங்கு சினிமாவில் பிரபல தம்பதிகளாக உள்ள நடிகர்க விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் பார்த்துள்ளனர். அவர்கள் இருவரும் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் நடிகர் ரவி தேஜாவின் இருமுடி படத்தை வெகுவாகப்பாராட்டி பதிவுகளை வெளியிட்டுள்ளனர். அந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது. மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.
நடிகர் விஜய் தேவரகொண்டா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
What a glorious atmosphere in the Telugu cinema halls ❤️❤️@RaviTeja_offl anna and my darling @ShivaNirvana have created a celebration across the Telugu states. #Irumudi is a must watch for the gripping storytelling and the message ❤️
Biggest celebratory hugs to Ravanna,…
— Vijay Deverakonda (@TheDeverakonda) August 25, 2026
Also Read… BKU உலகளாவிய பிளாக்பஸ்டர்.. ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்த நிவின் பாலி!
நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Yesterday I had the opportunity to watch Irumudi.. ❤️
What a beautiful film it is.. ❤️ it hit me in ways I didn’t see coming.. ❤️
Generally when we grow up in small towns something happens to us or something bothers us our first response will be to tell our elders what happened… pic.twitter.com/lyntnD3bm3— Rashmika Mandanna (@iamRashmika) August 25, 2026
Also Read… மலை வாழ் மக்களின் வாழ்க்கையை காட்டும் மேற்குத் தொடர்ச்சி மலை படம் 8 ஆண்டுகளை நிறைவு செய்தது