Karuppu: ஒரு தலைமுறை பிளாக்பஸ்டர்.. கருப்பு திரைப்பட 100வது நாள் குறித்து ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்ட வீடியோ!
RJ Balaji X Post: தென்னிந்திய சினிமாவில் சிறந்த நாயகனாக இருப்பவர் சூர்யா. இவரின் நடிப்பில் கடந்த 2026ம் ஆண்டு மே மாதத்தில் வெளியான படம் கருப்பொரு. இப்படம் வெளியாகி இன்றுடன் (23/08/2026) 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில், இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி சிறப்பு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் (RJ Balaji) இயக்கத்தில், 2026ம் ஆண்டில் வெளியாகி மாபெரும் பிளாக்பஸ்டர் திரைப்படமாக வெற்றிபெற்றதுதான் கருப்பு. இதில் முன்னணி நாயகனாகவும்,கருப்பானாக அனைவருக்கும் காமாட்சியளித்தவர் தி ஒன் சூர்யா (The One Suriya). இவரின் 45வது திரைப்படமாக கருப்பு (Karuppu) அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மிகவும் பிரம்மாண்டமான கதைக்களத்தில் உருவாகியிருந்தது. இதை ஆர்.ஜே.பாலாஜி (RJ Balaji) இயக்க, ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார். இதில் சூர்யா, திரிஷா (Trisha), இந்திரன்ஸ் மற்றும் அனகா மாயா ரவி உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்களும் இனைந்து நடித்திருந்தனர்.
2026ம் ஆண்டு மே 15ம் தேதியில் உலகமெங்கும் வெளியான இப்படம், இன்றுடன் (20/08/2026) 100வது நாளை கடந்துள்ளது. இதை கொண்டாடவும் வகையில் படக்குழு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டிருந்தது. அந்த விதத்தில், ஆர்.ஜே.பாலாஜி எமோஷனல் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.




இதையும் படிங்க: எப்போதும் எனது சொக்கத் தங்கம் அவர்கள்தான் – சிவகார்த்திகேயன் பேச்சு!
கருப்பு திரைப்படத்தின் 100வது நாளை முன்னிட்டு ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்ட எமோஷனல் பதிவு:
100 days of a fairytale journey..! ❤️❤️❤️
Different beliefs, different cultures, different generations, yet #Karuppu lives on etched deep in the hearts of people across the globe.!!!🔥🔥🔥
A generational blockbuster..!!!🎇🎇🎇
Thank you God..! Thank you People.! Couldn’t have… pic.twitter.com/esMf3HuBFK— RJ Balaji (@RJ_Balaji) August 23, 2026
அந்த பதிவில் ஆர்.ஜே.பாலாஜி, “ஒரு தேவதைக் கதைப் பயணத்தின் 100 நாட்கள். வெவ்வேறு நம்பிக்கைகள், வெவ்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறு தலைமுறைகள், ஆனாலும் கருப்பு உலகெங்கிலும் உள்ள மக்களின் இதயங்களில் ஆழமாகப் பதிந்து வாழ்கிறது. ஒரு தலைமுறை பிளாக்பஸ்டர். நன்றி இறைவா, நன்றி மக்களே, இதைவிடச் சிறந்த வரவேற்பையும் அங்கீகாரத்தையும் கேட்டிருக்க முடியாது. இறைவன் நாடினால்… இந்தப் பயணம் தொடரும்” என அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வெற்றிநடைபோடும் நிவின் பாலியின் பெத்தலேக குடும்ப யூனிட் படம் – கொண்டாட்டத்தில் படக்குழு
ஆர்.ஜே.பாலாஜியின் புது படம்:
இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி கருப்பு திரைப்படத்தின் வெற்றிக்கு பின், தற்போது ஹீரோவாக புதிய படத்தில் நடிக்கவுள்ளாராம். இன்னும் இப்படத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவரும் நிலையில், யார் இயக்குநர் மற்றும் யார் தயாரிப்பாளர் என அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. கிளறுப்பு படம் மாபெரும் வெற்றியை பெற்றிருக்கும் நிலையில், கருப்பு 2 படம் உருவாகுமா? அல்லது உருவாகாதா? என ரசிகர்கள் எதிர்பார்த்துவருகிறார்கள்.