AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திரையரங்குகளில் 100 நாட்களைக் கடந்தது கருப்பு படம் – கொண்டாட்டத்தில் படக்குழு

100 Days Of Karuppu Movie | தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் இந்த ஆண்டில் முதலாவதாக வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் கருப்பு படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 100 நாட்களைக் கடந்ததை படக்குழு கொண்டாடி வருகின்றது.

திரையரங்குகளில் 100 நாட்களைக் கடந்தது கருப்பு படம் – கொண்டாட்டத்தில் படக்குழு
கருப்புImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 23 Aug 2026 11:36 AM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யாவிற்கு இந்த 2026-ம் ஆண்டினை மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் ஆண்டாக தொடங்கி வைத்தது கருப்பு படம். இந்தப் படத்தை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கி இருந்தார். மேலும் நடிகர் சூர்யா நாயகனாக கருப்பு சாமியாக இந்தப் படத்தில் நடித்து இருந்த நிலையில் கடவுளையே எதிர்க்கும் வில்லனாக நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடித்து இருந்தார். இந்த கருப்பு படத்தில் நடிகர் சூர்யாவின் கதாப்பாத்திரம் எந்த அளவிற்கு கொண்டடப்பட்டதோ அதே அளவிற்கு நடிகர் ஆர்.ஜே.பாலாஜியின் கதாப்பாத்திரமும் கொண்டாடப்பட்டது. இந்த கருப்பு படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் இந்திரன்ஸ், த்ரிஷா கிருஷ்னன், அனகா, நட்டி நடராஜன், மன்சூர் அலிகான், ஜாஃபர், தீபா என பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தான் நடிகர் சூர்யாவின் நடிப்பில் இதுவரை வெளியான படங்களிலேயே அதிக வசூலைப் பெற்றப் படம் என்று ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திரையரங்குகளில் 100 நாட்களைக் கடந்தது கருப்பு படம்:

இந்த நிலையில் படம் திரையரங்குகளுக்கும் பிறகு ஓடிடியில் வெளியானது. அதனைத் தொடர்ந்து திரையரங்குகளில் சில காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பாகி வந்தது. இந்த நிலையில் கருப்பு படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 100 நாட்களைக் கடந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மேலும் படக்குழு தற்போது வெளியிட்ட எக்ஸ் தள பதிவு இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… மெகா ஸ்டார் சிரஞ்சீவி பர்த்டே ஸ்பெஷல்… 158-வது படத்தின் டைட்டில் க்ளிம்ஸ் வீடியோவை வெளியிட்ட படக்குழு

கருப்பு படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… இன்று மாலை வெளியாகிறது டோரதி படத்தின் முதல் சிங்கிள் கல்யாண விருந்து

Follow Us