AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மண்டாட்டி படத்திற்கு என்ன சென்சார் கிடைத்துள்ளது? வெளியானது அப்டேட்

Mandaadi Movie Censor Update | தமிழ் சினிமாவில் நடிகர் சூரி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் மண்டாட்டி. இந்தப் படத்தின் சென்சார் தொடர்பான அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அந்த அப்டேட் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

மண்டாட்டி படத்திற்கு என்ன சென்சார் கிடைத்துள்ளது? வெளியானது அப்டேட்
மண்டாட்டிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 20 Aug 2026 14:15 PM IST

தமிழ் சினிமாவில் காமெடியனாக ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வந்த நடிகர் சூரி தற்போது நாயகனாக தொடர்ந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் கடந்த 2024-ம் ஆண்டு முதல் நாயகனாக நடிக்கத் தொடங்கினார் நடிகர் சூரி. இவர் நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு தொடர்ந்து படங்களில் நாயகனாக மட்டுமே நடித்து வருகிறார். மேலும் படங்களில் காமெடி கதாப்பாத்திரங்களை ஏற்று நடிப்பதை தவிர்த்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் சூரி நடிப்பில் இதுவரை தமிழ் சினிமாவில் விடுதலை பாகம் ஒன்று, கருடன், விடுதலை பாகம் இரண்டு, கொட்டுக்காளி மற்றும் மாமன் என தொடர்ந்து 5 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. மேலும் நடிகர் சூரி நாயகனாக நடிக்கத் தொடங்கியதில் இருந்து தொடர்ந்து ஹிட் படங்களாகவே வெளியாகி வருகின்றது.

இதன் காரணமாகவே நடிகர் சூரி நாயகனாக நடிக்கும் அடுத்தடுத்த படங்கள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் நடிகர் சூரி தற்போது நாயகனாக நடித்து வரும் படம் மண்டாட்டி. இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.

மண்டாட்டி படத்திற்கு என்ன சென்சார் கிடைத்துள்ளது?

இந்த மண்டாட்டி படத்தை இயக்குநர் மதிமாறன் புகழேந்தி எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் படத்தில் இருந்து தொடர்ந்து பாடல்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 10-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் சென்சார் அப்டேட் என்ன என்பது குறித்து படக்குழு தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த மண்டாட்டி படத்திற்கு சென்சார் குழு யு/ஏ சான்றிதழை வழங்கி உள்ளது. இந்த அறிவிப்பு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… முதலில் தனுஷ் ஒரு முரட்டுதனமான மனிதர் என்று நினைத்தேன் – நடிகை பிரியா பவானி சங்கர்

மண்டாட்டி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… உடல் எடையைக் குறைத்த நடிகை நிவேதா தாமஸ்… வைரலாகும் போட்டோ

Follow Us