AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஜெய் – பிரியங்கா மோகன் நடிக்கும் ஏஜிஎஸ்29 பட ஷூட்டிங் ஓவர் – படக்குழு வெளியிட்ட வீடியோ பதிவு!

AGS29 Movie Shooting Wrap: தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் ஜெய். இவர் மற்றும் நடிகை பிரியங்கா மோகன் இருவரும் இணைந்து நடித்துவரும் திரைப்படம்தான் ஏஜிஎஸ்29. இப்படத்தின் ஷூட்டிங் சிறப்பாக ஆரம்பமாகியிருந்த நிலையில், முழுமையாக நிறைவடைந்ததாக படக்குழு அறிவிப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது.

ஜெய் – பிரியங்கா மோகன் நடிக்கும் ஏஜிஎஸ்29 பட ஷூட்டிங் ஓவர் – படக்குழு வெளியிட்ட வீடியோ பதிவு!
ஏஜிஎஸ்29 திரைப்பட படப்பிடிப்பு நிறைவுImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 27 Nov 2026 14:52 PM IST

கோலிவுட் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் ஜெய் (Actor Jai). இவரின் நடிப்பில் தமிழ் மொழியில் தொடர்ந்து பல திரைப்படங்கள் உருவாகிவருகிறது. இவர் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் (Aishwarya Rajinikanth) இயக்கத்தில் டெக்ஸ்லா (Texla Movie) என்ற படத்தில் இணைந்து நடித்துவந்த நிலையில், இன்னும் இதன் ஷூட்டிங் பணிகள் நடைபெற்றுவருகிறது. அந்த வரிசையில் இறுதியாக இவரின் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் சட்டென்று மாறுது வானிலை (Sattendru Maarudhu Vaanilai). கடந்த 2026 மே மாதத்தில் வெளியான இப்படம் ஓரளவு வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பின், இவர் ஏஜிஎஸ் (AGS29) நிறுவனத்தின் கீழ் உருவாகும் 29வது திரைப்படத்தின் ஹீரோவாக இணைந்தார். இந்த படத்தில் இவருடன் பிரியங்கா மோகன் (Priyanka Mohan) மற்றும் யோகிபாபு (Yogi Babu) இருவரும் இணைந்து நடித்துவரும் நிலையில், ஹாரர் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுவருகிறது.

இதை இயக்குநர் ஆனந்தன் எம்எஸ் இயக்க, ஏஜிஎஸ் என்டேர்டைன்மெண்ட் நிறுவனமானது தயாரிக்கிறது. இதன் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன் பூஜைகளுடன் ஆரம்பமான நிலையில், தற்போது நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: சூர்யா 49, 50 நம்பர் கேம்-ல் மாட்ட எனக்கு விருப்பமில்லை.. சூர்யாவுடன் அடுத்த படத்தில் இணைவது பற்றி ஆர்.ஜே.பாலாஜி பேச்சு!

ஜெய் மற்றும் பிரியங்கா மோகன் நடிக்கும் ஏஜிஎஸ்29 பட ஷூட்டிங் நிறைவடைந்ததாகக் படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:


இந்த ஏஜிஎஸ் 29 திரைப்படத்தில் ஜெய் ஹீரோவாக நடித்திருந்தாலும், நடிகை பிரியங்கா மோகனின் கதாபாத்திரமே இப்படத்தில் முன்னிலை வகிக்கும் என கூறப்படுகிறது. இவர்களுடன் இப்படத்தில் யோகி பாபு, பாலா சரவணன் மற்றும் நாசர் போன்ற நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது ஹாரர் கதைக்களத்தில் இயக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் மத்தியில் அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது.

இதையும் படிங்க: இந்த உலகத்திலே அழகான பெண்.. ஜேசனை பார்க்க வந்த மனைவி – வைரலாகும் ப்ரோமோ!

இப்படத்திற்கு தென்னிந்திய பிரபல இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ள நிலையில், படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையானது சிறப்பாக உருவாகியுள்ளது. இப்படத்தை படக்குழு தற்காலிகமாக ஏஜிஎஸ் 29 என அழைத்துவரும் நிலையில், இன்னும் டைட்டில் என்ன என்று படக்குழு அறிவிக்கவில்லை. இப்படத்தின் ஷூட்டிங் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் இப்படத்தின் டைட்டில் மற்றும் அதனை தொடர்ந்து அப்டேட்டுகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us