AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஏஜிஎஸ் என்டேர்டைமென்ட் நிறுவனத்தின் கீழ் புது படத்தில் இணைத்த ஜெய் மற்றும் பிரியங்கா மோகன்!

Jai and Priyanka Mohan Movie: கோலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்துவருபவர் ஜெய். இவரின் நடிப்பில் தமிழில் டெக்ஸ்லா படமானது உருவாகிவருகிறது. அந்த விதத்தில் ஏஜிஎஸ் என்டேர்டைமெண்ட்ஸ் நிறுவனத்தின் கீழ், இவர் புதிய திரைப்படத்தில் பிரியங்கா மோகனுடன் இணைந்துள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏஜிஎஸ் என்டேர்டைமென்ட் நிறுவனத்தின் கீழ் புது படத்தில் இணைத்த ஜெய் மற்றும் பிரியங்கா மோகன்!
ஜெய் மற்றும் பிரியங்கா மோகன் திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 06 Sep 2026 11:47 AM IST

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் ஜெய் (Actor jai). இவரின் நடிப்பில் தமிழ் மொழியில் தொடர்ந்து புது புது திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் (Aishwarya Rajinikanth) இயக்கத்தில் டெக்ஸ்லா (Texla) என்ற திரைப்படத்தின் நடிகராக நடித்துவருகிறார். இதில் சுராஜ் வெஞ்சாரமூடு மிகவும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இப்படம் 2026ம் ஆண்டு இறுதியில் வெளியாகும் என கூறப்படுகிறது. நடிகர் ஜெய் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் “சட்டென்று மாறுது வானிலை” (Sattendru Maarudhu Vaanilai). இந்த படமானது 2026ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாகி, ஓரளவு வரவேற்பை பெற்றிருந்தது. இதன் பிறகே டெக்ஸ்லா படத்தில் இணைந்தார்.

தற்போது ஜெய் ஏஜிஎஸ் என்டேர்டைமெண்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தை விஷாலின் (Vishal) சக்ரா (Chakra) திரைப்படத்தை இயக்கியிருந்த இயக்குநர் ஆனந்தன் எம்எஸ் இயக்கவுள்ளாராம். இதில் ஜெய்யுடன், நடிகை பிரியங்கா மோகன் (Priyanka Mohan) முக்கியமான வேடத்தில் இணைகிறார்.

இதையும் படிங்க: கருப்பனின் ஆட்டம் தொடர்கிறதா? இணையத்தில் வைரலாகும் கருப்பு 2 படத்தின் தகவல்

ஜெய் மற்றும் பிரியங்கா மோகனின் கூட்டணி திரைப்படம் குறித்து வெளியான எக்ஸ் பதிவு:

ஜெய் மற்றும் பிரியங்கா மோகன் கூட்டணி படம் :

நடிகர் ஜெய் மற்றும் பிரியங்கா மோகன் கூட்டணியில் புதிய படம் உருவாகிவருகிறது. இந்த படத்திற்கு தற்காலிகமாக AGS29 என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதை இயக்குநர் ஆனந்தன் எம்எஸ் இயக்க, இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். மேலும் இதில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கிறார். ஏற்கனவே ஏஜிஎஸ் நிறுவனத்தின் கீழ் உருவான பிளாஸ்ட படத்திற்கு இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தனுஷ் நடிப்பில் ரோம்-காம் பாணியில் வெளியான திருடா திருடி படம் 23 ஆண்டுகளை நிறைவு செய்தது – இயக்குநர் வெளியிட்ட பதிவு!

இந்த படத்தில் ஜெய் மற்றும் பிரியங்கா மோகனுடன் நடிகர்கள் யோகி பாபு, நாசர் மற்றும் ராஜிவ் மேனன் போன்ற பிரபலங்களும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பாலசுப்ரமணியம் பணியாற்ற, எடிட்டராக ஜன நாயகன் படத்தில் பணியாற்றிய பிரதீப் இ ராகவ் பணியாற்றுகிறாராம். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், பூஜைகளுடன் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us