நாய்கள் செய்த அதிசயம்.. நள்ளிரவில் பெண்ணுக்கு நடந்த கொடூரம்.. கைது செய்யப்பட்ட போதை இளைஞர்..
கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற போதை இளைஞரை, அங்கிருந்த 2 வளர்ப்பு நாய்கள் விரட்டிக் கடித்து பெண்ணைக் காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்.ஜி.ஜி.ஓ. காலனி அசோகபுரத்தில் பெட்டிக்கடை தீ வைப்பு குறித்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, இந்த அதிர்ச்சி சம்பவம் பதிவாகியிருந்தது தெரியவந்தது.
செப்டம்பர் 4, 2026: கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற போதை இளைஞரை, அங்கிருந்த 2 வளர்ப்பு நாய்கள் விரட்டிக் கடித்து பெண்ணைக் காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்.ஜி.ஜி.ஓ. காலனி அசோகபுரத்தில் பெட்டிக்கடை தீ வைப்பு குறித்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, இந்த அதிர்ச்சி சம்பவம் பதிவாகியிருந்தது தெரியவந்தது.
அதிகாலை 2 மணியளவில் சாலையோரம் தனியாக இருந்த பெண்ணிடம் கஞ்சா மற்றும் மது போதையில் வந்த இளைஞர் ஒருவர், திடீரென அத்துமீற முயன்றுள்ளார். பெண் கூச்சலிட்டதும், 2 நாய்கள் பாய்ந்து சென்று இளைஞரைக் கடித்து விரட்டியுள்ளன. சிசிடிவி அடிப்படையில் கணேஷ் நகர் பகுதியைச் சேர்ந்த பூபதியை துடியலூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
