கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனை? – வைரல் வீடியோ !
கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை ரயில் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்கள் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள் அருகருகே அமைந்துள்ளன.
கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை ரயில் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்கள் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள் அருகருகே அமைந்துள்ளன. இதனால் சுற்றுவட்டாரத்தில் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவுக்கு டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி இல்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், பேருந்து நிறுத்தத்தில் பயணி போல் அமர்ந்திருந்த ஒருவர், கைப்பையில் மதுபாட்டில்களை வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இதனை சமூக ஆர்வலர் ஒருவர் செல்போனில் பதிவு செய்த நிலையில், வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் சர்வசாதாரணமாக உலா வரும் பன்றி
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: ஏற்பாடுகள் தீவிரம்..
முதல்வர் விஜய்யின் பேச்சு மிகவும் கீழ்த்தரமானது - எம்.பி கனிமொழி
மாமதுரை திருவிழா 2.0 - பட்டாசு வெடிப்பதை காண கூடிய பொதுமக்கள்!
