நேபாள வெள்ளத்தில் இருந்து தப்பிய 28 தமிழக பக்தர்கள்; கோவை விமான நிலையத்தில் கண்ணீர் மல்க வரவேற்பு!
கைலாய யாத்திரைக்காக நேபாளம் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 28 பக்தர்கள், வெள்ள பாதிப்பில் இருந்து பாதுகாப்பாக மீண்டு இன்று கோவை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களை குடும்பத்தினர் மலர் மற்றும் பூங்கொத்துகள் கொடுத்து கண்ணீர் மல்க வரவேற்றனர். வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து ஒரு நாள் முன்பே தாங்கள் புறப்பட்டதால் பெரும் ஆபத்தில் இருந்து தப்பியதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
கைலாய யாத்திரைக்காக நேபாளம் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 28 பக்தர்கள், வெள்ள பாதிப்பில் இருந்து பாதுகாப்பாக மீண்டு இன்று கோவை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களை குடும்பத்தினர் மலர் மற்றும் பூங்கொத்துகள் கொடுத்து கண்ணீர் மல்க வரவேற்றனர். வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து ஒரு நாள் முன்பே தாங்கள் புறப்பட்டதால் பெரும் ஆபத்தில் இருந்து தப்பியதாக பக்தர்கள் தெரிவித்தனர். வெள்ள பாதிப்பு குறித்த தகவல் அறிந்து தங்களது குடும்பத்தினர் மிகுந்த அச்சத்தில் இருந்ததாகவும் கூறினர்.
சீன அரசு மற்றும் மத்திய, தமிழக அரசுகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளால் தாங்கள் பாதுகாப்பாக வெளியேற முடிந்ததாகவும், அதற்காக நன்றி தெரிவிப்பதாகவும் பக்தர்கள் கூறினர். நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பத்தினரை சந்தித்த அவர்கள், ஒருவரையொருவர் கட்டியணைத்து நெகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.
