டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்த முதல்வர் விஜய்..
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று பகல் 12 மணிக்கு தண்ணீர் திறந்து வைத்தார். தமிழ்நாட்டின் காவிரி டெல்டா விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாக மேட்டூர் அணை விளங்கி வருகிறது. இந்த அணையின் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை மற்றும் அரியலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று பகல் 12 மணிக்கு தண்ணீர் திறந்து வைத்தார். தமிழ்நாட்டின் காவிரி டெல்டா விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாக மேட்டூர் அணை விளங்கி வருகிறது. இந்த அணையின் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை மற்றும் அரியலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாக அதிகரித்து, அணையின் நீர்மட்டம் 90 அடியைத் தாண்டியது. இதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று டெல்டா பாசனத்திற்காக செப்டம்பர் 1ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 3,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து 45 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
