7 ரூபாய் டிக்கெட்டுக்கு 10 ரூபாயா?” – தனியார் பேருந்தை நடுரோட்டில் மறித்த பெண்!
கோவை உக்கடத்தில் 7 ரூபாய் டிக்கெட்டுக்கு 10 ரூபாய் வசூலித்த தனியார் பேருந்து நடத்துநரை பெண் பயணி ஒருவர் நடுரோட்டில் பேருந்தை மறித்து கேள்வி கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்கடத்தில் இருந்து அண்ணா சிலை செல்லும் பயணியிடம் 7 ரூபாய் கட்டணத்திற்கு பதிலாக 10 ரூபாய் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கோவை உக்கடத்தில் 7 ரூபாய் டிக்கெட்டுக்கு 10 ரூபாய் வசூலித்த தனியார் பேருந்து நடத்துநரை பெண் பயணி ஒருவர் நடுரோட்டில் பேருந்தை மறித்து கேள்வி கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்கடத்தில் இருந்து அண்ணா சிலை செல்லும் பயணியிடம் 7 ரூபாய் கட்டணத்திற்கு பதிலாக 10 ரூபாய் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கேள்வி எழுப்பிய பெண்ணிடம், “இஷ்டம் இருந்தால் ஏறு, இல்லையென்றால் இறங்கு; RTO-விடம் புகார் கொடு” என நடத்துநர் அடாவடியாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண் பேருந்தில் இருந்து இறங்கி, பேருந்தை நகர விடாமல் மறித்து நியாயம் கேட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதிக கட்டணம் வசூலித்த பேருந்து மற்றும் நடத்துநர் மீது RTO அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவையில் நகை வியாபாரியிடம் ரூ.1 கோடி வழிப்பறி; நடந்தது என்ன?
கோவையில் நூதன திருட்டு: சிசிடிவியில் சிக்கிய டிப்டாப் ஆசாமி!
கேரளாவில் கோர விபத்து: 8 தமிழ்நாட்டு பொறியியல் மாணவர்கள் பலி..
குட்டையில் நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்த காட்டு யானைகள்..
