யஷ் நடிப்பில் வெளியான ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ திரைப்படம் தொடர்பான சட்டப் பிரச்னை தற்போது யூடியூபர்கள் மற்றும் திரைப்பட விமர்சகர்களையும் சென்றடைந்துள்ளது. படத்தை விமர்சித்த யூடியூபர் சூரஜ் குமார், தமிழ் திரைப்பட விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி உள்ளிட்டோருக்கு படக்குழு சட்ட நோட்டீஸ் அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, பெங்களூரு நீதிமன்றம் ஆகஸ்ட் 22-ம் தேதி, படத்தைப் பற்றி அவதூறான அல்லது தவறான தகவல்களை வெளியிடத் தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. எனினும், எதிர்மறையான விமர்சனங்களுக்கு நீதிமன்றம் வெளிப்படையாகத் தடை விதிக்கவில்லை. இந்த வழக்கு செப்டம்பர் 28-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.