நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘Once More’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், படத்தின் தலைப்பை பயன்படுத்த அனுமதி வழங்கிய நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய் மற்றும் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு அர்ஜுன் தாஸ் நன்றி தெரிவித்துள்ளார். 1997-ல் விஜய் நடிப்பில் வெளியான ‘Once More’ படத்தின் தலைப்பை தற்போது தனது படத்துக்கு பயன்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வன்முறை, ஆபாச வார்த்தைகள், மதுபானம், புகைப்பிடித்தல் போன்றவை இல்லாத எளிமையான, காதல், உணர்வு மற்றும் நம்பிக்கை நிறைந்த கதையாக இப்படம் உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.