2029-ல் ராகுல் காந்தி பிரதமராக வருவார்.. தவெக அதற்கு உடன்படவில்லை என்றால்.. காங்கிரஸ் அமைச்சர் பரபரப்பு பேச்சு!
குமரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் பொறுப்பேற்கும் விழாவில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேஷ் பேசியதாவது, வருகின்ற 2029 நாடாளுமன்ற தேர்தலில் எங்களுடைய தலைவர் ராகுல் காந்தி, அடுத்த பிரதமராக வருவார். ஒருவேளை தமிழக வெற்றிக் கழகம் அதற்கு உடன்படாவிட்டால், காங்கிரஸ் கட்சியின் இரண்டு அமைச்சர்களும் அவர்களது பதவிகளில் நீடிக்கமாட்டார்கள்.
குமரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் பொறுப்பேற்கும் விழாவில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேஷ் பேசியதாவது, வருகின்ற 2029 நாடாளுமன்ற தேர்தலில் எங்களுடைய தலைவர் ராகுல் காந்தி, அடுத்த பிரதமராக வருவார். ஒருவேளை தமிழக வெற்றிக் கழகம் அதற்கு உடன்படாவிட்டால், காங்கிரஸ் கட்சியின் இரண்டு அமைச்சர்களும் அவர்களது பதவிகளில் நீடிக்கமாட்டார்கள். இது எல்லா இடங்களிலும் நாங்கள் சொல்லக்கூடிய கருத்து. ஏனென்றால் இந்த கட்சி தான் எங்களுக்கு பெரியது. இந்த கட்சி இல்லையென்றால், இந்த ராஜேஷ் குமார் ஒன்றுமே இல்லை. இந்த இயக்கம் தான் பெரியது. இந்த இயக்கம் நாளை இந்த பதவியை விட்டு செல்ல வேண்டும் என்று சொன்னால் அடுத்த நிமிடமே பதவியை விட்டு சென்றுவிடுவோம். ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கலாம், காங்கிரஸ் கட்சியில் இருக்கக்கூடிய கடைநிலை தொண்டர்களின் முகம் ராகுல் காந்தி என்று கூறியுள்ளார்.
