அமெரிக்காவுடனான போர் நீடித்து வரும் நிலையில், ஈரானின் தெற்கு ஃபார்ஸ் மாகாணத்தில் 7.5 டிரில்லியன் கனஅடிக்கும் அதிகமான இயற்கை எரிவாயு இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு எண்ணெய் அமைச்சர் மொஹ்சென் பாக்நெஜாட் தெரிவித்துள்ளார். இதில் 72 முதல் 73 சதவீதம் வரை, அதாவது சுமார் 5.7 டிரில்லியன் கனஅடி எரிவாயுவை வர்த்தக ரீதியாக எடுக்க முடியும் என அவர் கூறியுள்ளார். இந்தக் கண்டுபிடிப்பு ஈரானின் ஏற்கனவே மிகப்பெரிய எரிவாயு வளத்தை மேலும் அதிகரித்துள்ளது.