ஒடிசாவைச் சேர்ந்த பெண் ஒருவரைக் கொடூரமாகக் கொலை செய்து, அவரது உடற்பாகங்களைச் சூட்கேஸில் அடைத்து ரயிலில் வீசியதுடன், சில உடற்பாகங்களை வீட்டில் பாத்திரத்தில் வைத்து சமைக்க முயன்ற அதிர்ச்சியளிக்கும் சம்பவம் சென்னையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சென்னையிலிருந்து டெல்லி சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ரயிலில், உத்தரப் பிரதேச மாநிலம் ஆகரா இரயில் நிலையத்தை அடைந்தபோது ஒரு பொதுப் பெட்டியிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது. அங்குள்ள இரயில்வே போலீசார் நடத்திய சோதனையில், உரிமையாளர் இல்லாத சிவப்பு நிறச் சூட்கேஸுக்குள் பெண் ஒருவரின் தலையில்லாத உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.