10 இன்ச் பீட்சா ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு 7 இன்ச் பீட்சாவை அனுப்பிய உணவகத்துக்கும், உணவு டெலிவரி நிறுவனத்துக்கும் ரூ.10,520 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், வாடிக்கையாளர் ஒருவர் ஆன்லைன் உணவு டெலிவரி செயலி மூலம் 10 இன்ச் அளவுள்ள பீட்சாவை ஆர்டர் செய்துள்ளார். இந்த பீட்சாவின் விலை ரூ.505. இதற்காக ரூ.15 டெலிவரி கட்டணமும் செலுத்தியுள்ளார். ஆனால், அவருக்கு டெலிவரி செய்யப்பட்ட பீட்சா 10 இன்ச் அளவில் இல்லாமல் வெறும் 7 இன்ச் அளவில் இருந்ததாக கூறப்படுகிறது.