ஹரியானாவின் குருக்ஷேத்ராவில் கணவரை கொலை செய்ததாகக் கூறப்படும் பெண், அவரது வயிற்றை கத்தியால் கிழித்து குடல் உள்ளிட்ட உறுப்புகளை வெளியே எடுத்ததாக அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பெஹோவா சாலையில் வாடகை வீட்டில் வசித்து வந்த ராஜேஷ் மற்றும் அவரது மனைவி விம்லா தேவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று மாலை இருவரும் சத்தமாக வாக்குவாதம் செய்த நிலையில், வீட்டின் உரிமையாளர் ரிங்கு மாடிக்குச் சென்றுள்ளார். அப்போது ராஜேஷ் ரத்த வெள்ளத்தில் கிடந்ததாகவும், விம்லா அவரது உடலில் இருந்து வெளியே வந்த குடலை ஒரு பையில் வைத்துக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. உரிமையாளரைப் பார்த்ததும் விம்லா மாடியில் இருந்து குதித்ததாகத் தெரிகிறது.