AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
கோவை ஆவாரம்பாளையத்தில் மூட்டை, மூட்டையாகக் கடத்தப்படும் ரேஷன் அரிசி? வைரலாகும் வீடியோ!

கோவை ஆவாரம்பாளையத்தில் மூட்டை, மூட்டையாகக் கடத்தப்படும் ரேஷன் அரிசி? வைரலாகும் வீடியோ!

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 29 Aug 2026 13:46 PM IST

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் இருந்து மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி வாகனங்களில் ஏற்றிச் செல்லப்படும் செல்போன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஏழை, எளிய மக்களுக்கு அரசு வழங்கும் அத்தியாவசியப் பொருட்களில் முக்கியமான ரேஷன் அரிசி, முறைகேடாகக் கடத்தப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

 

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் இருந்து மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி வாகனங்களில் ஏற்றிச் செல்லப்படும் செல்போன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஏழை, எளிய மக்களுக்கு அரசு வழங்கும் அத்தியாவசியப் பொருட்களில் முக்கியமான ரேஷன் அரிசி, முறைகேடாகக் கடத்தப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குடும்ப அட்டைதாரர்கள் அரிசி கேட்டு ரேஷன் கடைக்குச் செல்லும்போது, “அரிசி கையிருப்பில் இல்லை” எனக் கூறி திருப்பி அனுப்பப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மூட்டை, மூட்டையாக அரிசி எடுத்துச் செல்லப்படும் காட்சிகள் வெளியாகியிருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் குடிமைப் பொருள் வழங்கல் துறை மற்றும் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Follow Us