AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
நாகை மூகாம்பிகை கோயில் குடமுழுக்கு.. பரிசு வழங்கிய இஸ்லாமியர்கள்!

நாகை மூகாம்பிகை கோயில் குடமுழுக்கு.. பரிசு வழங்கிய இஸ்லாமியர்கள்!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 29 Aug 2026 00:00 AM IST

நாகப்பட்டினம், ஆரியநாட்டு தெருவில் தாய் மூகாம்பிகை கோயில் உள்ளது. இந்த கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 23, 2026 அன்று கோயிலின் குடமுழக்கு விழா தொடங்கியது. கொடியேற்றத்திற்கு முன்னதாக நீலாயதாட்சி அம்மன் கோயிலில் இருந்து முளைப்பாரியுடன் தீர்த்தம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

நாகப்பட்டினம், ஆரியநாட்டு தெருவில் தாய் மூகாம்பிகை கோயில் உள்ளது. இந்த கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 23, 2026 அன்று கோயிலின் குடமுழக்கு விழா தொடங்கியது. கொடியேற்றத்திற்கு முன்னதாக நீலாயதாட்சி அம்மன் கோயிலில் இருந்து முளைப்பாரியுடன் தீர்த்தம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அதன் பிறகு ஆகஸ்ட் 24, 2026 முதல் ஆகஸ்ட் 27, 2026 வரை யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இந்த குடமுழுக்கு விழாவுக்கு நாகை இஸ்லாமியர்கள் ஜமாத் அமைப்பினர், விழாவுக்கு தேவையான பொருட்களை பரிசாக வழங்கினர். மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக இஸ்லாமியர்கள் வழங்கிய பரிசுகள் இருந்தன. இந்த குடமுழுக்கு விழாவில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

Published on: Aug 28, 2026 11:40 PM
Follow Us