AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
தூத்துக்குடியில் ஆவணி அவிட்டம் சிறப்பு வழிபாடு.. பூணூல் மாற்றும் சடங்கில் ஏராளமானோர் பங்கேற்பு

தூத்துக்குடியில் ஆவணி அவிட்டம் சிறப்பு வழிபாடு.. பூணூல் மாற்றும் சடங்கில் ஏராளமானோர் பங்கேற்பு

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 27 Aug 2026 07:27 AM IST

ஆகஸ்ட் 27ஆம் தேதியான இன்று ஆவணி அவிட்டம் அனுசரிக்கப்படுகிறது. ஆவணி அவிட்டம் என்பது இந்து சமயத்தில் கடைப்பிடிக்கப்படும் முக்கிய ஆன்மிக நிகழ்வாகும். இது பொதுவாக ஆவணி மாதத்தில் வரும் பௌர்ணமி நாளில் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் பழைய பூணூலை அகற்றி, புதிய பூணூலை அணியும் சடங்கை ஆண்கள் மேற்கொள்கின்றனர்.

ஆகஸ்ட் 27ஆம் தேதியான இன்று ஆவணி அவிட்டம் அனுசரிக்கப்படுகிறது. ஆவணி அவிட்டம் என்பது இந்து சமயத்தில் கடைப்பிடிக்கப்படும் முக்கிய ஆன்மிக நிகழ்வாகும். இது பொதுவாக ஆவணி மாதத்தில் வரும் பௌர்ணமி நாளில் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் பழைய பூணூலை அகற்றி, புதிய பூணூலை அணியும் சடங்கை ஆண்கள் மேற்கொள்கின்றனர். ஆவணி அவிட்டம் நாளில் வேத மந்திரங்கள் ஓதப்பட்டு, முன்னோர்கள் மற்றும் ரிஷிகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

மேலும், கடந்த காலங்களில் செய்த தவறுகளுக்குப் பிராயச்சித்தம் செய்து, இனி வேதம் மற்றும் ஆன்மிகப் பயிற்சிகளை முறையாகத் தொடர வேண்டும் என்ற உறுதியையும் இந்த நாள் குறிக்கிறது. ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் தெப்பக்குளம் அருகே உள்ள பஜனை மண்டபத்தில் அதிகாலையிலேயே ஏராளமான ஆண்கள் பூணூல் மாற்றும் சடங்கை மேற்கொண்டனர்.

Follow Us