குதிரை பேரம் புகார்.. 100 நாட்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை.. டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!
சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை இன்று (ஆகஸ்ட் 25, 2026) நேரில் சந்தித்து பேசினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், குதிரை பேரம் குறித்து புகார் அளித்து 100 நாட்கள் ஆகியும் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை இன்று (ஆகஸ்ட் 25, 2026) நேரில் சந்தித்து பேசினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், குதிரை பேரம் குறித்து புகார் அளித்து 100 நாட்கள் ஆகியும் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சூழலில் தமிழக வெற்றிக் கழகத்தின் குதிரை பேரம் குறித்தும் ஆளுநரிடம் புகார் அளித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். பணம், பதவிக்காக எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சி மாறுகின்றனர் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். மேலும், தங்களின் குதிரை பேர புகார் மீது நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதி அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார் என்பது இதில் குறிப்பிடத்தக்கது.
