விமானப் பணிப்பெண்ணாகப் பணியாற்றி, பின்னர் காவல் துறை அதிகாரியாக உயர்ந்து மாதிரியாகத் திகழ்ந்த மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த டிஎஸ்பி நேஹா பச்சீசியா, நில ஆக்கிரமிப்பு மற்றும் பணப்பறிப்பு வழக்கில் சிக்கிப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மத்தியப் பிரதேசத்தின் கட்னி பகுதியில் சிஎஸ்பி-யாகப் பணியாற்றி வந்த நேஹா பச்சீசியா, கொலை வழக்கு ஒன்றின் விசாரணையின் போது, முதன்மை குற்றவாளியின் குடும்பத்தாரிடம் சட்டப்பூர்வச் சலுகைகள் செய்ய ரூபாய் 15 லட்சம் லஞ்சம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது.