மின்கம்பத்தில் மோதி தீப்பிடித்த கார்: பெண் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்!
கோவை அவினாசிலிங்கம் கல்லூரி முதல் GCT கல்லூரி செல்லும் சாலையில், பெண் ஓட்டிச் சென்ற சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி தீப்பிடித்து எரிந்தது. வெங்கடாபுரத்தைச் சேர்ந்த சாந்தா (50), இன்று பிற்பகல் காரில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின்கம்பத்தில் மோதியது.
கோவை அவினாசிலிங்கம் கல்லூரி முதல் GCT கல்லூரி செல்லும் சாலையில், பெண் ஓட்டிச் சென்ற சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி தீப்பிடித்து எரிந்தது. வெங்கடாபுரத்தைச் சேர்ந்த சாந்தா (50), இன்று பிற்பகல் காரில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின்கம்பத்தில் மோதியது. மோதிய வேகத்தில் காரில் இருந்து புகை வெளியேறி, சிறிது நேரத்தில் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது.
சுதாரித்துக் கொண்ட சாந்தா உடனடியாக காரில் இருந்து வெளியேறி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். எனினும், கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
கோவையில் நகை வியாபாரியிடம் ரூ.1 கோடி வழிப்பறி; நடந்தது என்ன?
கோவையில் நூதன திருட்டு: சிசிடிவியில் சிக்கிய டிப்டாப் ஆசாமி!
கேரளாவில் கோர விபத்து: 8 தமிழ்நாட்டு பொறியியல் மாணவர்கள் பலி..
குட்டையில் நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்த காட்டு யானைகள்..
