கோவையில் களைகட்டிய ஓணம் கொண்டாட்டம்: திருவாதிரைக்களி நடனத்துடன் உற்சாக வரவேற்பு!
கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள கற்பகம் கல்லூரியில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு மாணவ-மாணவிகள் பாரம்பரிய உடைகளில் உற்சாகமாகக் கொண்டாடினர். மாணவிகள் கசவு சேலையும், மாணவர்கள் வேட்டி உள்ளிட்ட பாரம்பரிய உடைகளையும் அணிந்து பங்கேற்றனர். விழாவில் கேரளாவின் பாரம்பரிய செண்டை மேளம் முழங்க, மாணவர்கள் ஆட்டம், பாட்டம் என உற்சாகமாகக் கொண்டாடினர்.
கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள கற்பகம் கல்லூரியில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு மாணவ-மாணவிகள் பாரம்பரிய உடைகளில் உற்சாகமாகக் கொண்டாடினர். மாணவிகள் கசவு சேலையும், மாணவர்கள் வேட்டி உள்ளிட்ட பாரம்பரிய உடைகளையும் அணிந்து பங்கேற்றனர். விழாவில் கேரளாவின் பாரம்பரிய செண்டை மேளம் முழங்க, மாணவர்கள் ஆட்டம், பாட்டம் என உற்சாகமாகக் கொண்டாடினர். விழாவின் முக்கிய நிகழ்வாக மாணவிகள் பாரம்பரிய திருவாதிரைக்களி நடனத்தை அரங்கேற்றினர். மேலும், யானை இடம்பெற்ற பாரம்பரிய நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
பாரம்பரிய இசை, நடனம் மற்றும் வண்ணமயமான உடைகளுடன் நடைபெற்ற ஓணம் கொண்டாட்டத்தால் கல்லூரி வளாகமே திருவிழாக் கோலம் பூண்டது. மாணவர்களிடையே ஒற்றுமை மற்றும் சகோதரத்துவ உணர்வை ஏற்படுத்தும் வகையிலும் விழா அமைந்தது.
கோவையில் நூதன திருட்டு: சிசிடிவியில் சிக்கிய டிப்டாப் ஆசாமி!
கேரளாவில் கோர விபத்து: 8 தமிழ்நாட்டு பொறியியல் மாணவர்கள் பலி..
குட்டையில் நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்த காட்டு யானைகள்..
கோவை இஸ்கான் கோவிலில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட கிருஷ்ண ஜென்மாஷ்டமி
