திருமலை வனப்பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், வனப்பாதைகளில் செல்லும் பக்தர்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் AI தொழில்நுட்பம் கொண்ட ரோபோ நாயை பயன்படுத்துவது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் பரிசீலித்து வருகிறது. நான்கு கால்களுடன் இயங்கும் இந்த ரோபோ நாயில் தெர்மல் கேமராக்கள், LiDAR மற்றும் AI தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் வனப்பகுதிகளில் விலங்குகள் மற்றும் மனிதர்களை வேறுபடுத்தி அடையாளம் காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏதேனும் வனவிலங்குகளின் நடமாட்டம் கண்டறியப்பட்டால், அதன் இருப்பிடத்தை துல்லியமாக குறிப்பிடும் Geo-tagged எச்சரிக்கைகளை கட்டுப்பாட்டு அறைகளுக்கு உடனடியாக அனுப்பும் வகையில் இந்த ரோபோ நாய் வடிவமைக்கப்பட்டுள்ளது.