AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
“திரைப்படங்களில் கஞ்சா பயன்படுத்தும் காட்சிகள் இருக்கக் கூடாது” – நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார்

“திரைப்படங்களில் கஞ்சா பயன்படுத்தும் காட்சிகள் இருக்கக் கூடாது” – நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார்

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 24 Aug 2026 21:44 PM IST

தஞ்சாவூர் ஸ்ரீபதி சினிமா தியேட்டரில், நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் ‘நிஞ்சா’ திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்டனர். தஞ்சையைச் சேர்ந்த இயக்குநர் முருகு இயக்கும் இப்படத்தின் டைட்டில் லுக் ஏற்கனவே வெளியிடப்பட்டது. பூஜையைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜி.வி.பிரகாஷ்குமார், தஞ்சாவூரை மையப்படுத்தி ‘நிஞ்சா’ திரைப்படம் உருவாகி வருவதாகவும், கதை பிடித்ததால் உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

 

தஞ்சாவூர் ஸ்ரீபதி சினிமா தியேட்டரில், நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் ‘நிஞ்சா’ திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்டனர். தஞ்சையைச் சேர்ந்த இயக்குநர் முருகு இயக்கும் இப்படத்தின் டைட்டில் லுக் ஏற்கனவே வெளியிடப்பட்டது. பூஜையைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜி.வி.பிரகாஷ்குமார், தஞ்சாவூரை மையப்படுத்தி ‘நிஞ்சா’ திரைப்படம் உருவாகி வருவதாகவும், கதை பிடித்ததால் உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார். காமெடி, காதல் உள்ளிட்ட அனைத்து அம்சங்களுடன் குடும்பத்தினர் ரசிக்கும் பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்றும், அடுத்த ஆண்டு வெளியாகும் என்றும் கூறினார். மேலும், “திரைப்படங்களில் கஞ்சா பயன்படுத்துவது போன்ற காட்சிகள் இருக்கக் கூடாது என்பதுதான் எனது விருப்பமும்” என தெரிவித்தார். இப்படத்தில் பிரத்னா கதாநாயகியாக நடிக்கிறார். சீன் ரோல்டன் இசையமைக்கிறார்.

Follow Us