மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த இக்பால் என்ற சிறுவன், மர்மமான உடல்நலப் பிரச்சினையால் பல நாட்களாக குளத்திலேயே நீண்ட நேரம் தங்கி வந்த நிலையில், அனந்த் அம்பானியின் தலையீட்டால் மும்பைக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். பெல்டாங்காவைச் சேர்ந்த இக்பால், குளத்தில் அமர்ந்தபடி தின்பண்டங்களைச் சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து அவரது நிலை வெளிச்சத்துக்கு வந்தது. தண்ணீரைவிட்டு வெளியே வந்தால் உடல் முழுவதும் கடுமையான எரிச்சல் ஏற்படுவதாகவும், ஏதோ அமானுஷ்ய சக்தி தன்னை ஆட்கொண்டது போன்ற உணர்வு ஏற்படுவதாகவும் அவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.