தவெகவினர் பேசுவது வேடிக்கையாக உள்ளது.. திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பேசு!
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வேலூரில் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வரும் நாட்களில் திமுக சட்டப்பேரவைக்கு வராது, அவர்களால் தேர்தலில் இனி வெல்ல முடியாது என தவெக உறுப்பினர்கள் பேரவையில் பேசியுள்ளது வேடிக்கையாக உள்ளது என கூறியுள்ளார்.
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வேலூரில் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வரும் நாட்களில் திமுக சட்டப்பேரவைக்கு வராது, அவர்களால் தேர்தலில் இனி வெல்ல முடியாது என தவெக உறுப்பினர்கள் பேரவையில் பேசியுள்ளது வேடிக்கையாக உள்ளது. யார் ஆட்சிக்கு வந்தாலும் தங்களுக்கு பின் யாரும் வர மாட்டார்கள் என்று தான் சொல்வார்கள். இப்படிதான் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கூறினார்கள். ஆனால், நாங்கள் இப்படி கூறினோம். எங்களையும் அவர்கள் தோற்கடித்து வெற்றிப்பெற்றுள்ளார்கள். இவையெல்லாம் அரசியல் ஞானத்தோடு சொல்லும் சொல் அல்ல என்று அவர் கூறியுள்ளார். பிறகு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்குவது குறித்து பேசிய அவர், நிதி இல்லை, கஜானாவை காலியாக வைத்தி விட்டார்கள் என்பது தானே முதல்வரின் குற்றச்சாட்டாக உள்ளது. பிறகு எப்படி கார் கொடுக்க முடியும், எப்படி ஓட்டுநர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவையில் நகை வியாபாரியிடம் ரூ.1 கோடி வழிப்பறி; நடந்தது என்ன?
கோவையில் நூதன திருட்டு: சிசிடிவியில் சிக்கிய டிப்டாப் ஆசாமி!
கேரளாவில் கோர விபத்து: 8 தமிழ்நாட்டு பொறியியல் மாணவர்கள் பலி..
குட்டையில் நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்த காட்டு யானைகள்..
