கோலிவுட் சினிமாவில் உச்ச நாயகனாக இருந்து தற்போது தமிழக அரசியலில் மாபெரும் தூணாக இருந்துவருபவர் விஜய். சினிமாவில் 33 கிட்டத்தட்ட ஆண்டுகள் இருந்த இவர், தற்போது மக்களுக்கான சேவைக்காக தமிழக அரசியலில் இறங்கி, தற்போது முதலமைச்சராக பதிவியேற்று தனது பணிகளை செய்துவருகிறார். இவர் சினிமாவில் கடைசியாக நடித்திருந்த திரைப்படம் ஜன நாயகன் . இந்த படமானது முதலில் 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியாகவிருந்த நிலையில், சென்சார் பிரச்சனையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. நீண்டுகொண்டே சென்ற சான்றிதழ் வழங்கும் செயல்முறையின் காரணமாக, படத்தின் வெளியீடு பல மாதங்கள் தாமதமானது. தயாரிப்பாளர்கள் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு, திரைப்படத்தை மீண்டும் சமர்ப்பித்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், சில காட்சிகள் குறித்த புகார்களின் காரணமாக, அத்திரைப்படம் ஒரு மறுஆய்வுக் குழுவுக்கு அனுப்பப்பட்டதால், மேலும் தாமதங்கள் ஏற்பட்டன. பின்னர் 2026 ம் ஆண்டு ஜூலை 23ம் தேதியில் திரையரங்குகளில் இப்படமானது வெளியானது. இப்படமானது வெளியாகி கிட்டத்தட்ட 4 வாரங்களான நிலையில், தற்போது ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் ஜீ5 ஓடிடியில் வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி முதல் ஸ்ட்ரீம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது இப்படத்தில் மமிதா பைஜு, பூஜா ஹெக்டே, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.