இந்தியாவில் சமையல் எரிவாயு விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம் என்றும், முடிந்தவரை எரிசக்தியைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. உலகின் இரண்டாவது பெரிய திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) இறக்குமதியாளரான இந்தியா, உள்நாட்டு தேவையை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சுத்திகரிப்பு நிறுவனங்கள் LPG உற்பத்தியை அதிகரிக்கவும், தொழிற்துறைக்கான விற்பனையை குறைக்கவும் அவசரகால அதிகாரங்களை மத்திய அரசு பயன்படுத்தியுள்ளது.