கேரள விசிக விருது வழங்கும் விழா.. கட்சித் தலைவர் திருமாவளவன் பேச்சு!
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், கேரள மாநில விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருது வழங்கும் விழா செப்டம்பர் 02, 2026 அன்று நடைபெற உள்ளது. இது முதல் முறையாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிகழ்வாகும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், கேரள மாநில விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருது வழங்கும் விழா செப்டம்பர் 02, 2026 அன்று நடைபெற உள்ளது. இது முதல் முறையாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிகழ்வாகும். தமிழகத்தில் ஆண்டுதோறும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருது விழா நடைபெறுவதை போல கேரளாவில் இந்த ஆண்டு முதல் இந்த விழா தொடங்குகிறது. முதல் விழாவில் இரண்டு விருதுகள் மகாத்மா அய்யன்காளி, ஸ்ரீ நாராயண குரு அவர்களின் பெயர்களிலும் அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு, இரண்டு முக்கிய பேராளுமைகளுக்கு வழங்க உள்ளோம். மாகத்மா அய்யன்காளி விருது கேரள முதலமைச்சர் சதீசன் அவர்களுக்கும், ஸ்ரீ நாராயண குரு விருது சிபிஐ கட்சியின் மூத்த தலைவர் சி.திவாகரன் அவர்களுக்கும் வழங்கப்படுகிறது. சிவகிரி மடத்தில் பீடாதிபதியாக உள்ள சுவாமி சட்சிதாந்தா அவர்களும், உண்ணிகிருஷ்ணன் அவர்களும் இந்த விருது வழங்கும் விழாவில் பங்கேற்கின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.
