கோவையில் கோலாகலமாக நடந்த ஓணம் கொண்டாட்டம்.. குதிரை நடனத்துடன் அசத்திய மாணவர்கள்!
Onam Celebration Coimbatore: கோவையின் வி.எல்.பி. ஜானகியம்மாள் கல்லூரியில் ஓணம் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தமிழக மற்றும் கேரள மாணவர்கள் இணைந்து செண்டை மேளம் முழங்க, மகாபலி வேடமிட்டு ஊர்வலம் வந்தனர். மேலும், இசைக்கு ஏற்ப குதிரை நடனமாடியும், உறியடித்தல் மற்றும் கயிறு இழுத்தல் போன்ற விளையாட்டுகளில் பங்கேற்றும் அசத்தினர்.
கோவை, ஆகஸ்ட் 22: கோவைப்புதூர் பகுதியில் அமைந்துள்ள வி.எல்.பி. ஜானகியம்மாள் கல்லூரியில் ஓணம் பண்டிகை மிகக் கோலாகலமாகவும் உற்சாகமாகவும் கொண்டாடப்பட்டது. கேரளாவின் பாரம்பரிய திருவிழாவான ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கல்லூரியில் பயிலும் தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அனைவரும் ஒன்றிணைந்து கலாச்சார நல்லிணக்கத்துடன் இவ்விழாவைக் கொண்டாடினர்.
விழாவின் தொடக்கமாக, மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடைகளான செட்டு புடவை மற்றும் வேட்டி அணிந்து வந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கேரள பாரம்பரிய மேளமான செண்டை மேளத்தின் அதிரடி முழக்கத்துடன், மகாபலி சக்கரவர்த்தி வேடமணிந்த மாணவரை வரவேற்று கல்லூரி வளாகத்திற்குள் ஊர்வலமாக அழைத்து வந்தனர். இந்த ஊர்வலம் கிராமத்து திருவிழாக்களின் கம்பீரத்தையும் பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருந்தது.
தொடர்ந்து நடந்த கலை நிகழ்ச்சிகளில், கிராமத்து வாழ்க்கை முறையையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட யானை உருவத்தின் வரவேற்பு, பாரம்பரிய ராட்டின விளையாட்டுகள், உறியடித்தல் மற்றும் விறுவிறுப்பான கயிறு இழுத்தல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவர்கள் உற்சாகத்துடன் கயிறு இழுத்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
கோவையில் களைகட்டிய ஓணம் கொண்டாட்டம்.. நடனமாடி அசத்திய மாணவர்கள்!
ஆசிரியர் தாக்கியதால் மாணவர் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு
கோப்புகளை சீக்கிரம் திறக்க வேண்டும் முதல்வருக்கு உதயநிதி கோரிக்கை
திருச்சியில் ரயில் விபத்து சோதனை - விரைவு மீட்பு பணி!
