AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
சென்னை, கடலூர், விழுப்புரத்தில் கொட்டிய கனமழை.. தணிந்த வெப்பம்..

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 21 Aug 2026 07:01 AM IST

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து மாலை அல்லது இரவு நேரங்களில் நல்ல மழை பதிவாகி வருகிறது. இந்தச் சூழலில், நேற்று இரவு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய நல்ல மழை பதிவானது. இதனால் பூமியின் உஷ்ணம் தணிந்து காணப்படுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் அனேக பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 21ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow Us