சென்னையில் இந்திய தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் 2026 அறிமுகம்.. அமைச்சர் ஸ்ரீநாத் தொடங்கி வைப்பு..
இந்திய மோட்டார்ஸ்போர்ட் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக, சிடிஆர்–ஜேகே டயர் எஃப்எம்எஸ்சிஐ இந்திய தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் 2026 சென்னையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். 1997-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சாம்பியன்ஷிப், இந்தியாவின் முதன்மையான சர்க்யூட் கார் பந்தயத் தொடராக இருந்து வருகிறது.
இந்திய மோட்டார்ஸ்போர்ட் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக, சிடிஆர்–ஜேகே டயர் எஃப்எம்எஸ்சிஐ இந்திய தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் 2026 சென்னையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். 1997-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சாம்பியன்ஷிப், இந்தியாவின் முதன்மையான சர்க்யூட் கார் பந்தயத் தொடராக இருந்து வருகிறது. நரேன் கார்த்திகேயன், கருண் சந்தோக் உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் இந்தத் தொடரில் உருவாகியுள்ளனர். 2026 சீசனில் நான்கு சுற்றுகள் நடைபெற உள்ளன. முதல் இரண்டு சுற்றுகள் கோயம்புத்தூரிலும், மூன்றாவது சுற்று பெங்களூருவிலும், இறுதிச்சுற்று சென்னையிலும் நடைபெறுகிறது. அடுத்த தலைமுறை பந்தய வீரர்களை உருவாக்கும் முக்கிய தளமாக இந்த சாம்பியன்ஷிப் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
