AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
31-வது தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு.. உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த முதல்வர் விஜய்..

31-வது தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு.. உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த முதல்வர் விஜய்..

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 20 Aug 2026 07:00 AM IST

சென்னை கோவலத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நேற்று இரவு சந்தித்துப் பேசினார். அமித் ஷா ஏற்பாடு செய்த இரவு விருந்திலும் விஜய் பங்கேற்றார். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு அமித் ஷாவை விஜய் சந்திப்பது இதுவே முதல்முறை என்பதால் அரசியல் வட்டாரத்தில் இந்தச் சந்திப்பு கவனம் பெற்றுள்ளது.

சென்னை கோவலத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நேற்று இரவு சந்தித்துப் பேசினார். அமித் ஷா ஏற்பாடு செய்த இரவு விருந்திலும் விஜய் பங்கேற்றார். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு அமித் ஷாவை விஜய் சந்திப்பது இதுவே முதல்முறை என்பதால் அரசியல் வட்டாரத்தில் இந்தச் சந்திப்பு கவனம் பெற்றுள்ளது. அமித் ஷா தலைமையில் இன்று கோவலத்தில் 31-வது தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதில் தென்மாநில முதலமைச்சர்கள் மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகள், கூட்டுறவு மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நீர்வளப் பகிர்வு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது.

இதனிடையே, அமித் ஷா – விஜய் இடையிலான தனிப்பட்ட சந்திப்பு அரை மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வளர்ச்சித் திட்டங்கள், மத்திய அரசின் நிலுவை நிதிகள் மற்றும் மாநில உரிமைகள் தொடர்பான கோரிக்கைகள் குறித்து விஜய் ஆலோசித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us