சென்னையில் ஆட்டோ ஓட்டி வரும் சந்திரனுக்கு ஒரு தசாப்தத்துக்கு முன்பு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதற்கான பணம் இல்லாத நிலையில், அவரது மனைவி சிறுநீரகத்தை தானமாக வழங்க முன்வந்தார். இதையடுத்து மருத்துவர் ஜார்ஜி ஆபிரகாம் நிதி திரட்டி அறுவை சிகிச்சையை மேற்கொள்ள உதவினார். சிறுநீரக மாற்று சிகிச்சை பெரும்பாலும் மருத்துவத்தைவிட பணம் சார்ந்ததாக இருப்பதாக மருத்துவர் ஜார்ஜி ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.