கோவையில் மதுபோதையில் அட்டகாசம் – 4 வடமாநில இளைஞர்கள் சிக்கினர்
கோவை துடியலூர் அருகே அப்பநாயக்கன்பாளையத்தில் மதுபோதையில் பொருட்களை சேதப்படுத்தி, திருட்டில் ஈடுபட்ட 4 வடமாநில இளைஞர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஓரிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜோதி ரஞ்சன் உள்ளிட்ட 4 பேர், கடைகளின் பெயர்ப் பலகைகள், கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்களை உடைத்ததுடன், வீடுகளில் இருந்து பொருட்களையும் திருடியதாக கூறப்படுகிறது. மேலும், ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்றதும் தெரியவந்தது. பொதுமக்கள் அவர்களைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணை நடைபெற்று வருகிறது.

Follow Us