சேலத்தில் துவங்கப்பட்ட ரயில் பெட்டி உணவகம் – மக்களிடையே வரவேற்பு
சேலம் அயோத்தியாபட்டினம் ரயில் நிலையத்தில் அருகில் தென்னக ரயில்வே சார்பில் ரயில் பெட்டி உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை சேலம் ரயில்வே கோட்டர் மேலாளர் பன்னாலால் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அயோத்தியாபட்டினம் ரயில்வே கேட் பகுதியில் தினந்தோறும் அரூர், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் கடந்து செல்கின்றது. சேலத்தில் இருந்து விருதாச்சலம், கடலூர், சென்னை எக்மோர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினம்தோறும் ரயில்கள் செல்கின்றன.
சேலம் அயோத்தியாபட்டினம் ரயில் நிலையத்தில் அருகில் தென்னக ரயில்வே சார்பில் ரயில் பெட்டி உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை சேலம் ரயில்வே கோட்டர் மேலாளர் பன்னாலால் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அயோத்தியாபட்டினம் ரயில்வே கேட் பகுதியில் தினந்தோறும் அரூர், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் கடந்து செல்கின்றது. சேலத்தில் இருந்து விருதாச்சலம், கடலூர், சென்னை எக்மோர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினம்தோறும் ரயில்கள் செல்கின்றன. எனவே, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள அயோத்தியாபட்டினத்தில் ரயில்வே கேட் பகுதியில் உணவகம் அமைப்பது குறித்து தென்னக ரயில்வே திட்டமிட்டு இருந்தது. அதன்படி தற்போது “கேரளா ஃபுட் எக்ஸ்பிரஸ்” என்ற பெயரில் உயர்தர உணவகத்தை ரயில்வே நிர்வாகம் தனியாருடன் இணைந்து திறந்துள்ளது. இந்த உணவகத்தில் டீ, காபி, ஐஸ்கிரீம் வகைகள், நூடுல்ஸ், கிரில் சிக்கன், சவர்மா உள்ளிட்ட உணவுகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 24 மணி நேரமும் கேரளா ஃபுட் எக்ஸ்பிரஸ் உணவகம் செயல்படும் என தெரிவித்துள்ளனர். ரயில் பெட்டியில் ஏசியுடன் கூடிய உணவகம் அமைக்கப்பட்டுள்ளதால் இந்த உணவகம் பொதுமக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
