சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு மாநிலங்களவையில் பதிலளித்த மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி, பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிப்பதில் மத்திய அரசுக்கு நேரடி பங்கு இல்லை என்று தெரிவித்தார்.